கூலாய் வட்டாரத்தில் இந்துக்கள் சடலங்களை அடக்கம் செய்வதற்கு போதிய இடம் இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதால் ஜொகூர் அரசாங்கம் இந்த வட்டாரத்தில் பத்து ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும் என்று ஜொகூர் மாநில மக்கள் நீதி கட்சியின் இந்தியப்பிரிவின் தலைவரும், கூலாய் தொகுதியின் தலைவரு மான எஸ்.கோபாலகிருஷ்ணன்கேட்டுக் கொண்டார். கடந்த 80 ஆண்டுகளுக்கு முன், கூலாய் 23 ஆவது மைலில் வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கடந்த பல ஆண்டுகளாக இடப்பற்றாக்குறையை எதிர் நோக்கி வருவதாக அவர் தெரி வித்தார். இட பற்றாக்குறையால் இடுகாட்டு நிலத்தில் ஏற்கெனவே அடக்கம் செய்த சடலத்தின் மீது அடக்கம் செய்யும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டு வருவது மிகவும் வேதனை அளிப்பதாக அவர் கூறினார். ஆதலால் ஜொகூர் அரசு இதனை கருத்தில் கொண்டு இங்குள்ள இந்துக்களுக்கு கூலாய் மாவட்டத்தில் 10 ஏக்கர் நிலத்தை வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். நேற்று முன்தினம் இங்கு நடைபெற்ற பக்காத்தான் ஹராப் பான் ஆண்டுக்கூட்டத்தின் போது அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.மேலும் கூலாய் வட்டாரத்தில் இருக் கும் நான்கு தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் விளையாடுவதற்கு திடலும் கிடையாது. இந்த நாட்டில் நமக்கு கிடைக்க வேண்டிய பல உரிமைகளை இழந்து, வாழ்வதற்கு நாம் என்ன ஏமாந்த சமு தாயமா என்று அவர் கேள்வி எழுப்பினார். ஒரே மலேசியா என்று அரசாங்கம் கோஷமிட்டுக் கொண்டு, இந்தி யர்களை இந்த நாட்டில் ஓரங்கட்டி வருவது மிகவும் வேதனை அளிப்பதாக எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறினார். இந்த கூட்டத்தில் குடியுரிமை, சிவப்பு அடையாளக்கார்டு, பிறப்புச் சான்றிதழ் போன்ற இந்தியர்கள் எதிர் நோக் கும் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன. வரும் பொதுத் தேர்தலில் ஒரு நாடாளுமன்றம் மூன்று சட்டமன்ற தொகுதிகளை எதிர்கட்சிகள் கைப்பற்றும் என்று அவர் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்