சொத்து ஊழல் வழக்கில் தடுக்கப்பட்ட அறுவரில் இரு மேம்பாட்டாளர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்ட வேளையில் நால்வரிடம் தொடர்ந்து விசார ணை மேற்கொள்வதற்காக இம்மாதம் 9ஆம் தேதி வரை தடுத்து வைக்க ஜொகூர்பாரு நீதிமன்ற மூத்த பதிவாளர் ஹபிசா ஜொஹார் அரிப் ஜொஹோர் லஞ்ச ஒழிப்பு ஆணை யத்திற்கு அனுமதி வழங்கினார். மேம்பாட்டாளர்கள் இருவரை லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரி கள் விசாரணை மேற்கொண்ட பின் பிணையில் விடுவிக்க அனுமதித்ததாக தெரிவிக்கப் பட்டது. முன்னதாக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பலமில்லியன் வெள்ளி சொத்து மோசடி தொடர் பில் ஆறு பேர் விசார ணைக்காக தடுக்கப்பட்டனர். அதில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவரின் மகனும் ஆட்சிக் குழு உறுப்பி னரின் சிறப்பு அதிகாரியும் அடங் குவார். 2009ஆம் ஆண்டு மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணைய சட்டம் பிரிவு 17(எ)யின் கீழ் விசாரணை மேற்கொள்ளும் வகையில் அவர்கள் தடுக்கப்பட் டுள்ளனர். முன்னதாக ஐவர் லஞ்ச ஒழிப்பு ஆணைய தடுப்பு சட்டைகளை அணிந்திருந்தவாறு ஆறு வாகனங்களில் 20 லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளின் பாது காப்புடன் காலை 9.00 மணியளவில் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டனர். ஒரு சந்தேக நபர் மட்டும் சாதாரண உடையில் காணப்பட்டார். காலை 11.15 மணியளவில் அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை விட்டு பாதுகாப்புடன் வெளியேறினர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்