அண்மையில் ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிகாமட் மாவட்டமே அதிக அளவில் பாதிக்கப்பட்ட வேளையில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழைகாரணமாக அம்மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளை கொண்ட சில இடங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 1 மணி யளவில் மொத்தம் நான்கு வெள்ள துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மாநில சுகாதார, சுற்றுச் சூழலுக்கான ஆட்சிக்குழு உறுப் பினர் டத்தோ ஆயுப் ரஹ்மாட் அந்த மையங்களில் 41 பேர் தங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து மழை பெய்வதால் சுங்கை சிகாமட், சுங்கை பூலோகாசாப்பின் நீரின் அளவு உயர்ந்து வருவதை காண முடிவதாக தெரிவித்த அவர், அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வசிப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். தற்போதைய வெள்ள காலத்தில் பிள்ளைகளை ஆபத்தான இடங்களில் விளையாட அனுமதிக்க வேண்டாம் எனவும் பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்