பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளி வேனை மோதிய சாலை விபத்தில் 4 இந்திய மாணவர்கள் சொற்ப காயங்களுடன் உயிர்தப்பினர்.நேற்று காலை 6.50 மணியளவில் போர்ட்டிக்சன், லுக்குட், ஜாலான் சிரம்பான் சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி மாணவர்களை பள்ளி வேனிலிருந்து இறக்கிக் கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாக போலீஸ் பேச்சாளர் கூறினார். தாமான் லுக்குட் ஜெயா, ஸ்ரீ பாரிட் ஆகிய இடங்களைச் சேர்ந்த 12 இந்திய மாணவர்களுடன் பள்ளி வேன் ஓட்டுநர் கனகவள்ளி ஜெகநாதன் (39) சாலை ஓரத்தில் வேனை நிறுத்திய போது லுக்குட்டிலிருந்து பயணிகளுடன் வந்த பேருந்து மோதியதாக அவர் குறிப்பிட்டார். இவ்விபத்தில் வேனிலிருந்த மாண வர்கள் பயத்தில் அலறியதுடன், வேஸ்வின் வசந்தகுமார் (9), சிவபாலன் (12), சாஸ்வின் (10), அ.அன்புச்செல்வன் (12) ஆகிய 4 மாணவர்கள் போர்ட் டிக்சன் மாவட்ட மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றனர். மேலும் 8 மாணவர்கள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியதாக கூறப்பட்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்