நெகிழிப்பைக்கு 20 காசு கட்டணம் விதிக்கும் நடைமுறையை இவ்வாண்டு முதல் அமல்படுத்தியிருக்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கம், அந்த 20 காசு கட்டண விதிப்பானது, வரும் 14 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சியினரின் தேர்தல் நிதி திரட்டும் யுக்தியாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, அவற்றை கொண்டு செல்வதற்கு பயனீட்டாளர்களிடமிருந்து ஒரு நெகிழிப்பைக்கு கடை உரிமையாளர்கள் 20 காசு கட்டணம் விதிக்கின்றனர். முன்பு சனிக்கிழமை மட்டுமே நடைமுறையில் இருந்த இந்த அமலாக்கம் கடந்த ஜனவரி முதல் எல்லா நாட்களிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. நெகிழிப்பை போன்ற அழியா பிளாஸ்டிக் பைகள் நட்புறவான சுற்றுச்சூழலுக்கு பெரும் குந்தகத்தை ஏற்படுத்தி, பூமிக்கு பேரழிவை ஏற்படுத்தி வரு வதால், சிலாங்கூர் மாநிலத்தில் நெகிழிப்பையை துடைத்தொழிக்கும் ஒரு முயற்சியாக நெகிழிப்பைக்கு 20 காசு கட்டணம் விதிக்கப்படுவதாக சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக நெகிழிப்பைக்கு 20 காசு கட்டணம் விதிக்கப்படும் முறை குறித்து மலேசிய நண்பன் கேள்வி எழுப்பி வருகிறது. குறிப்பாக, நெகிழிப்பைக்கு விதிக்கப்படும் இந்த 20 காசு கட்டணம் யாருடைய பையை நிரப்புவதற்காக இந்த கட்டண விதிப்பை நடைமுறைப்படுத்தி வருகிறது என்று மலேசிய நண்பன் வினவியுள்ளது. காரணம், நெகிழிப்பைக்கு விதிக்கப்படும் 20 காசு கட்டணம் பயனீட்டாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி வருகிறது என்று பல்வேறு தரப்பினர் குறைகூறி வருகின்றனர். குறிப்பாக, நெகிழிப்பையின் பயன்பாட்டை குறைப்பதற்கு எந்தவொரு விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தாமல் அவசர அவசரமாக இந்த 20 காசு கட்டண விதிப்பை அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்று மலேசிய நண்பன் வினவியுள்ளது. இதற்கு பதில் அளித்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் நெகிழிப்பை தொடர்பான விவகாரத்திற்கு பொறுப்பான பி.கே.ஆர். அரசாங்கத்தின் முதிர் நிலை ஆட்சிக்குழு உறுப்பினருமான எலிசபெத் வோங், கடை உரிமையாளர்கள், பயனீட்டாளர்களிடமிருந்து விதிக்கின்ற 20 காசு கட்டணம், பின்னர் அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு சமூக நற்காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்று விளக்கியுள்ளார். ஆனால், அவரின் நொண்டிச்சாக்கான பதில்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன என்பதை மலேசிய நண்பன் அறியாமல் இல்லை. *சிலாங்கூரில் நெகிழிப்பையை முற்றாக துடைத்தொழிக்க வேண்டுமானால் கடைகளில் வாங்கப்படும் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அதே நெகிழிப்பையை தந்து 20 காசு கட்டணம் விதிப்பது எந்த அளவிற்கு நெகிழிப்பையை துடைத்தொழிக்கும் முயற்சிக்கு துணைபுரியும்? *மேற்கத்திய நாடுகளை போல நெகிழிப்பைக்குப் பதிலாக காகிதத்தினால் செய்யப்பட்ட அல்லது எளிதாக அழியக்கூடிய தன்மையிலான பொரு ளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கைப்பையை தந்து 20 காசு கட்டணம் விதிப்பது குறித்து ஏன் சிலாங்கூர் அரசு சிந்திக்கவில்லை? *நெகிழிப்பைக்கு 20 காசு கட்டணம் விதிப்பு என்றால் இந்த மூன்று மாத காலத்தில் நெகிழிப்பை விற்பனை வழி சிலாங்கூர் மாநில அரசு எவ்வளவு தொகையை வசூல் செய்துள்ளது? *நெகிழிப்பை விற்பனை வழி கிடைக்கப்பெற்றத் தொகையில் இதுவரையில் எத்தனை அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது? எப் படி வழங்கப்பட்டுள்ளது? அமைப்பை யார் தேர்வு செய்கிறார்? *ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு நெகிழிப்பைகள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதை சிலாங்கூர் மாநில அரசாங்கம் எவ்வாறு உறுதி செய்கின்றது? அந்தப் பணத்தை எவ்வாறு வசூல் செய்கின்றது? வசூல் செய்யப்பட்ட பணம் எவ்வாறு சிலாங்கூர் அரசிடம் சேர்ப்பிக்கப்படுகின்றன? *இது உண்மையிலேயே சிலாங்கூர் மாநிலத்தில் நெகிழிப்பையை துடைத்தொழிக்கும் முயற்சியா? அல்லது நெகிழிப்பையை துடைத் தொழிப்பதாக கூறி, வரும் பொதுத் தேர்தலில் தேர்தல் நிதியை திரட்டும் எதிர்க்கட்சிகளின் யுக்தியா? என்பது குறித்து எலிசபெத் வோங் விளக்க வேண்டும் என்று மலேசிய நண்பன் கோருகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்