img
img

வாக்காளர்களாக மாறி மலேசியாவைக் காப்பாற்றுவீர்!
சனி 04 மார்ச் 2017 13:13:05

img

மலேசியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் மலேசியர்கள் அனைவரும் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார்.அதற்கு நாட்டில் இன்னும் வாக்காளர் களாகப் பதிவு செய்யாமல் இருக்கும் சுமார் 40 லட்சம் பேர் உடனடியாக தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டு, வரும் 14-ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பொதுத் தேர்தலுக்கான நாள் நெருங்கி விட்டது. இவ்வாண்டு ஜூலை அல்லது செப்டம்பர் மாதத்தில் நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தல் நடைபெறலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க மலேசியர்கள் இம்மாதம் 31-ஆம் தேதிக்குள் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவர்கள் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்யா விட்டால், அவர்கள் இவ்வாண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் ஒருபோதும் வாக்களிக்க முடியாது என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார். கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் 13ஆவது பொதுத் தேர்தலில் மத்திய அரசாங்கத்தில் மாற்றம் வர வேண்டும் என்று பெரும்பாலான மலேசிய வாக்காளர்கள் விரும்பினர். ஆனால், நாட்டின் பொதுத் தேர்தல் நியாயமாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெறவில்லை அந்த வாய்ப்பு நிறைவேறாமல் போனது என்றார். 47 விழுக்காடு வாக்காளர்களின் ஆதரவோடு அம்னோவும், தேசிய முன்னணியும் நாடாளுமன்றத்தில் 60 விழுக்காடு இடங்களைப் பிடித்தது. குறைந்த வாக்குகளின் வழி நாட்டின் முதலாவது பிரதமரான பெருமையையும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தட்டிச் சென்றார் என்று லிம் சொன்னார். அரசியல் கட்சிகள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து பொது அமைப்புகளும் வரும் 28 நாட்களில் அதிகமான மலேசியர்களை வாக்காளர்களாகப் பதிவு செய் யும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்ய மேற்கண்ட 40 லட்சம் மலேசியர்களும் அவசியம் தங்களை வாக்காளர்களாப் பதிவு செய்து கொள்வது அவசியமாகும் என்று கிட் சியாங் மேலும் கூறினார். இனி மற்றவர்களை சந்திக்கும்போது நலமா? எப்படி இருக்கிறீர்கள்? என கேட்பதை விடுத்து, நீங்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்து விட்டீர்களா என கேட்டு இந்நாட்டில் அனைவரும் தங்களை வாக்காளர்களாப் பதிவு செய்திருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இன்று ஒருவர் தன்னை வாக்காளராகப் பதிவு செய்துக் கொண்டால், மறுநாள் அல்லது அதற்கும் மறுநாள் வாக்களிக்கலாம். ஆனால், மலேசியா தொழில்நுட்பத்துறையில் துரித வளர்ச்சி கண்டிருந்தப் போதிலும், தேர்தல் ஆணையம் இந்த வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் தோல்வி அடைந்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img