img
img

தமிழ்ப்பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் சாலைகள்!
சனி 04 மார்ச் 2017 13:07:57

img

கம்போங் பாண்டான் தமிழ்ப்பள்ளி மாணவர்ளை அச்சுறுத்தும் புதிய சாலை மேம்பாட்டு திட்டத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்போங் பாண்டான் இந்தியர் செட்டில்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளியில் 300 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு வரும் சாலை அப்பகுதியில் முதன்மை சாலையாக இருப்பதால் அங்கு தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படும். குறிப்பாக இப்பகுதியில் சமய பள்ளி, இடைநிலைப் பள்ளிகளும் உள்ளன. இப்பகுதியில் வாழும் மக்கள் வேலைக்குச் செல்வதற்கு இச்சாலைகளை தான் பயன்படுத்துகின்றனர். இப்போக்குவரத்து பிரச்சினைக்கே எப்படி தீர்வு காண முடியும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் அப்பகுதியில் மேலும் பல சாலைகளை இணைப்பதால் அங்கு மேலும் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது என்று தித்திவங்சா தொகுதி மஇகா தலைவர் சுந்தரம் கூறினார். தமிழ்ப்பள்ளிக்கு முன்புறம் புதியதாக அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது 700 வீடுகளுக்கான கட்டுமான பணி முடிவடைந்து விட்டது.மேலும் 1920 வீடுகளுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் அப்பகுதியில் 2 ஆயிரத்து 620 வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டிற்கு இரு கார்கள் என்றாலும் அச்சாலையில் ஏற்படவிருக்கும் நெரிசல் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் தான் முடிவு செய்ய வேண்டும்.அதே வேளையில் 2 ஆயிரத்து 620 வீடுகளுக்கான கார்கள் அனைத்தும் தமிழ்ப்பள்ளிக்கு முன் புறம் தான் வெளியாகும் வகையில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தான் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இத்திட்டத்தை உடனடியாக ரத்துச் செய்வதுடன், மாற்று வழியை அமைக்க கோலாலம்பூர் மாநகர் மன்றமும், மேம்பாட்டு நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்று சுந்தரம் கேட் டுக் கொண்டார். இச்சாலைகள் அமைக்கப்படும் விவகாரங்கள் குறித்து கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அக்கடிதங்களுக்கு எந்த வொரு பதிலும் கிடைக்கவில்லை என்று கம்போங் பாண்டான் இந்தியர் செட்டில்மண்ட் குடியிருப்புப் பகுதியில் நடவடிக்கை குழுத் தலைவர் பத்மநாதன் கூறினார். இதனிடையே கம்போங் பாண்டான் தமிழ்ப்பள்ளியின் முன்புறம் அமைக்கப்படும் சர்ச்சைக்குரிய சாலைகளை நேரடியாக கண்காணிக்க கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஆலோசனை வாரியக் குழு உறுப்பினர் டத்தோ ராஜா, திட்டமிடல் இலாகாவின் இயக்குநர் டத்தோ ஹாஜி நூர் அஷிசி, மேம்பாட்டு நிறுவனத்தினர் உட்பட பலர் நேற்று அப்பகுதிக்கு வந்திருந்தனர். இவ்விவகாரங்கள் குறித்து பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. இறுதியில் இச்சாலை பிரச்சினைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பேச்சுவார்த்தையில் இறுதியில் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.

அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img