வாடகை வீட்டில் ஐந்து பேரப்பிள்ளைகளுடன் துயரக்கடலில் சிக்கித் தவிக்கும் பி.சரஸ்வதி (வயது 51) என்ற மூதாட்டிக்கு உதவுவதற்கு மஇகா அல்லது மலேசிய இந்து சங்கம் முன்வருமா? தாமான் பெமூடா, ஜாலான் பெமூடா சூசோர் 7இல் வசிக்கும் பி.சரஸ்வதி, வீட்டிற்கு மாத வாடகையாக 200 வெள் ளியை செலுத்தி வருகிறார். இருதய நோயாளியான பி.சரஸ்வதி ஐந்து பேரப் பிள்ளைகளையும் தன் இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்காக இங் குள்ள தொழிற்சாலை ஒன்றில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருவதுடன் மாதம் 600 வெள்ளியை சம்பளமாக பெற்று வருவதாக அவர் சொன்னார். கிடைக்கும் வருமானத்தில் மாத வாடகை 200 வெள்ளியும் மின்சாரம், தண்ணீர் கட்டணமாக 160 வெள்ளியும் செலுத்தி வருகிறார். மீதமுள்ள 240 வெள்ளியை வைத்துக் கொண்டு பேரப் பிள்ளைகளை காப்பாற்றி வருவதாகவும் சிகாமட் சமூக நல இலாகா மூலம் 300 வெள்ளி உதவி நிதியாக பெற்று வருவதாகவும் அவர் சொன்னார். கிடைக்கின்ற இந்த வருமானத்தில் படிவம் 5, படிவம் இரண்டில் கல்வி பயிலும் தனது இரண்டு பிள்ளைகளையும் இரு பேரப்பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக அவர் கூறினார். சர்வேஸ்வரன் (வயது 10), திலகேஸ்வரன் (வயது 9), ஜெகதீஸ்வரன் (வயது 7), விக்னேஸ்வரன் (வயது 6), வாகேஸ்வரன் (வயது 5) ஆகிய ஐந்து பேரப்பிள்ளைகளில் ஜெகதீஸ்வரனுக்கு மட்டும் பிறப்பு பத்திரம் கிடையாது. ஆதலால் பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பி.சரஸ்வதி சொன்னார். பி.சரஸ்வதியின் மகன் சுரேஸ் செல்வராஜு கடந்த 6.9.2014ஆம் தேதி சாலை விபத்தில் பலியான பிறகு அவரின் மருமகள் புவ னேஸ்வரி (வயது 36) ஒரு வருட காலம் பிள்ளைகளை கவனித்து விட்டு அதன் பிறகு ஐந்து பிள்ளைகளையும் வளர்க்க முடியாமல், லாபீஸ் நகரிலுள்ள ஓர் இந்திய குடும்பத்தாரிடம் விட்டு சென்று விட்டார். இதனை கேள்விப்பட்ட நான் லாபீசுக்கு சென்று அந்த இந்திய குடும்பத்தாரிடமிருந்து ஐந்து பேரப்பிள்ளைகளையும் அழைத்து வந்து விட்டதாக பி. சரஸ்வதி கூறினார். இரண்டு வருடமாகியும் எனது மருமகளிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. ஆதலால் பேரப் பிள்ளைகளை தாமே வளர்த்து வருவதாக அவர் சொன்னார்.மிகவும் வறுமையில் வாழ்ந்து வரும் பி.சரஸ்வதிக்கு உதவ நினைக்கும் பொதுமக்கள், இயக்கங்கள் போன்றவை 010-5443902 என்ற கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்