நாட்டுத் தலைவர்கள் குறித்து தீங்கான நோக்குடன் கருத்துகளை பதிவுசெய்த வலைத்தள பதிவாளர் ஒருவர் விசாரணைக்காக தடுக்கப்பட்டார். முன்னதாக அதே நபர் சைக்கிள் சவாரி குறித்தும் வலைத்தளத்தில் தாக்குதல் நடத்தியதற்காக விசாரணை மேற்கொள்ளும் நோக்கில் பிடிபட்டவராவார்.நேற்று பிற் பகல் நீதிமன்றம் கொண்டு வந்த அவரை விசாரணைக்காக மூன்று நாள் தடுத்துவைக்க போலீசார் நீதிமன்ற உதவி பதிவாளர் பரிடாத் தல் பாரா முகமட் ஷுக்ரியின் அனுமதியை பெற்றனர். 64 வயதுடைய அந்த முதியவர் நேற்று பிற்பகல் 3.05 மணியள வில் தடுப்புக் கைதி சட்டையை அணிந்தவாறு போலீசாரால் நீதி மன்றம் கொண்டு வரப் பட்டார்.பிற்பகல் 3.50 மணிக்கு போலீ சுடன் அவர் ஜொகூர்பாரு வட பகுதி மாவட்ட போலீஸ் மையத் திற்கு கொண்டு செல்லப்பட்டார்.முன்னதாக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி டத்தோ பட்டம் கொண்ட வர்த்தகர் ஒருவருடன் தீங்கான நோக்குடன் கருத்தை பதிவு செய்ததற்காக பிடிபட்டார். சைக்கிள் சவாரி விபத்து தொடர்பாக அப்போது தவறான கருத்துகளை பதிவு செய்ததற்காக ஒரு டத்தோவுடன் அவரும் பிடிபட்டார்.பிணையில் விடு விக்கப்பட்ட 64 வயதுடைய நபர் தற்போது மீண்டும் போலீசாரால் பிடிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்