போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 5 லட்சம் கள்ளக் குறுந்தட்டுகள் செபராங் பிறை மாவட்ட போலீஸ் நிலை யத்தில் அழிக்கப்பட்டன. இந்த குறுந்தட்டுகள் உட்பட அதனை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் அழிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ சுவா கீ லீ கலந்து கொண்டார். இவை அனைத்தும் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை போலீசார் பறிமுதல் செய்த பொருட்ளாகும். இதன் மதிப்பு லட்சத்தை எட்டும் என அவர் சொன்னார். சாலை ஓரங்கள், இரவுச் சந்தை, கடைகள் ஆகியவற்றில் கள்ள குறுந்தட்டுகளை விற்று வந்தவர்களிடமிருந்து இவை அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் கள்ள குறுந்தட்டுகள் உற்பத்தியை ஒழிப்பதற்காக 510 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இச்சோதனையில் 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோ சுவா தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்