மார்ச் மாத தொடக்கத்தி லிருந்து டீசல் விலை லிட்டருக்கு 5 காசு உயர்ந்துள்ளதைத் விரைவு பேருந்து நடத்து னர்கள் பல்வேறு சுமைகளை எதிர் நோக்க வேண்டியுள்ள நிலையில், இதனால் பேருந்து கட்டணங்கள் உயர்த் தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும், அரசாங்கம் விரைவு பேருந்து கட்டணங்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளதால், எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று மலேசிய பேருந்து நடத்துனர்கள் சங்கம் கூறியது. இறுதியாக கடந்த 2008ஆம் ஆண்டு விரைவு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது. பின்னர் அன்று முதல் இன்று வரை அது எந்த வகையிலும் உயர்த்தப்படவில்லை என்று அச்சங்கத்தின் தலைவர் டத்தோ அஸ்ராப் அலி கூறினார். இதனால் பள்ளி பேருந்துகள் எந்த வகையிலும் பாதிக்கப்ப டாது. காரணம் அவர்கள் நடப்பு டீசல் விலைக்கு ஏற்ற வாறு தங்களின் கட்டணங்களை சீர்படுத்திக் கொள்ளலாம் என்றார். நடப்பு டீசல் விலைக்கு ஏற்றவாறு விரைவு பேருந்து கட்டணங்களை சீர்படுத்துமாறு இச்சங்கம் பலமுறை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், எங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் இன்றுவரை செவி சாய்க்கவில்லை என்றார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்