இரு ஆண்டுகளுக்கு முன்னர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 2 ஆயிரத்து 950 வெள்ளி கையூட்டு வழங்கியதன் தொடர்பில் பிடிபட்ட வர்த்தகர் ஒருவருக்கு நேற்று ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 20 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. தற்காப்பு தரப்பில் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுப்பதற்கான ஆதாரங்களை நிரூபிக்கத் தவறியதைத் தொடர்ந்து 57 வயது லிம் வீ குவாங் எனும் அந்த வர்த்தகருக்கு செக்ஷன் நீதிபதி முகமட் பாவ்சி முகமட் நாஸிர் அத்தண்டனையை விதித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு பத்து பகாட் ஜாலான் செப்பாட்டில் போதைப் பொருள், துப்பாக்கி ரவையை வைத் திருந்த காரணத்தால் தன்னை கைது செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் முகமட் மொக்தார் முகமட் நோர் எனும் அதிகாரிக்கு கையூட்டு கொடுக்க முயன் றதாக லிம் வீ குவாங் முன்னதாக 2009 லஞ்ச ஒழிப்பு ஆணைய சட்டம் பிரிவு 17 (பி) யின் கீழ் குற்றச்சாட்டை எதிர் நோக்கியிருந்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்