சீரிமின் (SIRIM) தர நிர்ணயத்துக்கு ஏற்ப இல்லாமல் பயன்படுத்தப்பட்ட டயர்களுக்கு சாயம் பூசி மீண்டும் புது டயர்களைத் தயாரிக்கும் 80 முதல் 100 ஆலைகள் நாட்டில் செயல்படுவதாக நம்பப்படுகிறது. இதுவரை சீரிமின் தர நிர்ணயத்துக்கு ஏற்ப டயர்களை வெளியிடுவதற்கான சான்றிதழ்களை 82 ஆலைகள் பெற்றிருப்ப தாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் கூறியுள்ளார். தர நிர்ணயத்தைப் பின்பற்றாத டயர்களைப் பயன்படுத்தினால் விபத்தின்போது வாகனமோட்டிகளுக்கு ஆபத்து நேரிடும். போலியான அத்தகைய டயர்கள் குறைந்த விலையில் விற்கப்படு வதையும் அமைச்சர் சுட்டிக்காட் டினார். இவ்வேளை இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கை வாயிலாக சாலை போக்குவரத்து துறையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு 480 போலி டயர்களை போலி சீரிம் ஒட்டிகளையும் பறிமுதல் செய்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக சிலாங்கூர், புக்கிட் பெருந்தோங் -கிலும், நெகிரி செம்பிலான் செனாவாங்கிலும் நடத்தப்பட்ட அச்சோதனையின் போது உள்நாட்டவர் இரு வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஒன்பது பேரும் தடுத்து வைக்கப்பட்டனர். சீரிம் தரநிர்ணயத்துக்கு ஏற்ப தயாரிக்கப்படும் மறுபயனீட்டு டயர்கள் சந்தையில் ஆயிரத்து வெ.1,150க்கு விற்கப்படும் வேளையில், போலி டயர் கள் வெ.400க்கு விற்கப்படு கின்றன.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்