img
img

100 ஆண்டுகால தாசேக் குளுகோர் மேபீல்ட் நிலம் கைமாறியது எப்படி!
வெள்ளி 03 மார்ச் 2017 14:55:06

img

தாசேக் குளுகோர் மேபீல்ட் தோட்ட இடுகாட்டு நிலத்தை எந்த முன்னறிவிப்பும் இன்றி மத்திய அரசாங்கம் மேம்பாட்டு நிறுவன மான பெல்டா எடுத்துக் கொண்டது. இப்பகுதியில் 100 ஆண்டு காலமாக இருந்து வரும் இந்த நிலம் தனியார் துறைக்கு கைமாறியது குறித்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், இப்பிரச் சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் இங்குள்ள மக்களுக்கு நியாயம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாக, பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் இவ்விவகாரத்தில் உதவ வேண் டும் என்று தாசேக் குளுகோர் மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் தேவதாஸ் வேண்டுகோள் விடுத்தார். இப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை காண வேண்டும் என்று செபராங் பிறை சமூகநல இயக்க தலைவர் ஏ.சௌந்தர ராஜன் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குனர் மு.இராமச்சந்திரனிடம் இவ்விவ காரத்தை கொண்டு செல்வதாக உறுதியளித்தார். கடந்த காலத்தில் போஸ்டட் தோட்ட நிறுவனம் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தந்துள்ளது என்றும், யாருடைய அனுமதியும் இல்லாமல் எங்களின் நிலத்தை எவ்வித அறி விப்பும் இன்றி தன் மூப்பாக செயல்படும் பெல்டா நிறுவனத்துக்கு எதிராக தாசேக் குளுகோர் மகா மாரியம்மன் பொறுப் பாளர்களாக தாமோதரன், முனியாண்டி, வேலு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே ஏ.சௌந்தரராஜன் இப்பிரச்சினை குறித்து பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக செயல் முறை அதிகாரி மு.இராமச்சந்திரனிடன் நேற்று இந்த இடுகாட்டு நில விவகாரம் பற்றி நண்பன் தொடர்பு கொண்டு கேட்டதில் அவர் அப்பிரச்சினை தமது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதை உறுதியளித் ததுடன் இந்த விவகாரத்தை மாநில அரசின் பார்வைக்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதுடன், இதற்கிடையே அந்த இடுகாட்டு நிலத்தில் முன் அறிவிப்பு ஏதும் வெளியிட்டு அப் பகுதியில் பிரே தம் புதைக்கக் கூடாது என்று சம்பந்தபட்ட பெல்டா நிறுவனம் கூறியிருப்பது ஏற்புடையவை இல்லை என்றும் அவர் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img