சுங்கை பாக்காப் பள்ளியின் ஆசிரியர் ஒருவரை 35 வயது மாது ஒருவர் அறைந்ததாக நடந்த வழக்கின் தீர்ப்பு மார்ச் மாதம் 8ஆம் தேதி தெரியவரும். டான் சியோங் என்பவர் தனது பிள்ளைக்கு பகாசா மலேசியா பாடம் போதித்து வந்த ஆசிரியர் எல்.வனிதாவை அறைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பிப்ர வரி 2ஆம் தேதியன்று ஏறத் தாழ மாலை 5.15 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வழக்கு சம்பந்த மான தீர்ப்பினை தீர் மானிப்பதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மார்ச் 8ஆம் தேதியினை நேற்று நிர்ணயம் செய்துள்ளது. தன்னிச்சையாக மற்றவருக்கு காயம் விளைவித்ததாக இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 323இன் கீழ் வகைப்படுத்தப்படுகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டாயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப் படலாம். அரசு தரப்பில் ஐந்து சாட்சியாளர்களும் பிரதிவாதி தரப்பில் இரண்டு சாட்சியாளர்களும் இவ்வழக்கில் தங்களின் வாக்குமூலத்தை தந்துள்ளனர். துணை பப்ளிக் புரோசி கியூட்டர் அபிக் நஸ்ரின் வழக்கினை நடத்தினார். டான் சியோங் என்பவரின் சார்பில் வழக்கறிஞர் முகமட் இஸ்மாயில் முகமட் ஆஜரானார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்