img
img

நெகிழிப்பைக்கு 20 காசு சமூக நற்பணித் திட்டமாம்!
வெள்ளி 03 மார்ச் 2017 14:45:30

img

சிலாங்கூரில் நெகிழிப் பைகளின் பயன்பாட்டை முழுமையாக அழிக்கும் நோக்கில் தான் 20 காசு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எலிசபெத் வோங் நேற்று கூறினார். நெகிழிப் பைகளுக்கு விதிக்கப்படும் 20 காசு யார் பைக்குள் செல்கிறது எனும் தலைப்பில் மலேசிய நண்பன் மார்ச் 1ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்திக்கு மாநில அரசாங்கம் விளக்கமளிக்கும் வகையில் எலிசபெத் வோங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வகையில் அவர் கூறி யிருப்பது பின்வருமாறு, ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நெகிழிப் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்படியே வாடிக் கையாளர்கள் நெகிழிப் பைகள் வேண்டும் என்று கேட்டால் அதற்கு கடைக்காரர்கள் 20 காசு கட்டணம் விதிக்கலாம். இந்த நடைமுறை அமலுக்கு வந்ததுடன் சிலாங்கூர் வாழ் மக்கள் சனிக்கிழமை பொருட்களை வாங்கச் செல்லும் போது கைகளில் பைகளுடன் செல்வது கிட்டத்தட்ட வழக்கமாகி விட்டது.நெகிழிப் பைகள் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடைமுறையை தினசரி கொண்டுவரலாம் என்ற பலரின் உத்தேச கருத்துகளின் அடிப்படையில் இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து இப்புதிய நடைமுறையை மாநில அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இந்த நடைமுறைக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் ஏற்படும் என்று அரசுக்கு தெரியும். ஆனால் கால ஓட்டத்தில் பொதுமக்கள் நெகிழிப் பைகளை பயன் படுத்துவதை தவிர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அரசுக்கு உண்டு என்று அவர் கூறினார். நெகிழிப் பைகளுக்கு விதிக்கப்படும் 20 காசு கட்டணம் யார் பைக்குச் செல்கிறது என்ற கேள்வி எழும்பியுள்ளது. இக்காசு யாருடைய பைக்கும் செல்லவில்லை. மாறாக இக்கட்டணத்தின் வழி கிடைக்கும் பணத்தை மாநில அரசு சமூல நலத் திட்டங்கள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது என்று அவர் விளக்கமளித்தார். மாநிலத்தில் உள்ள கடைகள், பேரங்காடிகள் உட்பட அனைத்து இடங்களிலும் அரசுப் பணியாளர்கள் அடிக்கடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். இவ்விடங்களில் நெகிழிப் பைகள் பயன்பாட்டில் இருந்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நடவடிக்கையின் மூலம் சிலாங்கூர் மாநிலத்தில் நெகிழிப் பைகளின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியும். அதே வேளையில் நெகிழிப் பைகளுக்கு மாற்றுப் பைகள் வழங்கப்படா ததற்கான காரணம் என்னவென்றும் கேள்வி எழுந்துள்ளது. ‘ஓஎக்ஓ - பையோ டிக்ரேபல்’ எனப்படும் மக்கிப் போகும் தன்மையுடைய நெகிழிப் பைகள், காகித பைகள் ஆகியவை நெகிழிப் பைகளுக்கு மாற்றுப் பைகளாக இருக்காது என்பதை மாநில அரசு உறுதி செய்துள்ளது. இப்பைகளை உற்பத்தி செய்வதற்கும் அழிப்பதற்கும் பல சிக்கல்கள் உள்ளன. அதன் அடிப் படையில் நெகிழிப் பைகளுக்கு பதிலாக மக்களே உரிய பைகளுடன் கடைகளுக்கு சென்றால் சிறப்பாக இருக்கும் என்று எலிசபெத் வோங் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img