போதைப்பொருள் குற்றச்சாட்டின்போது நேற்று பட்டர்வொர்த் நீதிமன்றம் கொண்டு வரப்பட்ட கைதி ஒருவர் குற்றவாளிக் கூண்டில் வலிப்பு வந்ததாக பாசாங்கு செய்ததில் நீதிமன்றம் பரபரப்பானது. 35 வயதுடைய அந்த நபர் குற்றவாளிக் கூண்டில் இருந்தவாறு மயங்கிய நிலையில் கீழே விழுந்ததால் அறையில் இருந்தவர்கள் செய் வதறியாது தவித்தனர். இதற்கிடையே, அந்த விசாரணை அறையில் இருந்த காவல் துறை அதிகாரி அந்த நபரை பரிசோதனை செய் ததில், அந்த நபர் பாசாங்கு செய்வதை கண்டறிந்ததுடன், அந்நபரின் வாயிலிருந்து நுரை எதுவும் வராததால் அந் நபர் குற்றச் சாட்டிலிருந்து தப்பிக்க கபட நாடகம் ஆடியது பின்பு தெரியவந்தது. வழக்க நிலைக்கு நீதிமன்ற அறை திரும்பியதும் அந்நபரின் மீது குற்றச்சாட்டு வாசிக்கப் பட்டு சிறைச் சாலைக்கு அனுப் பப்பட்டார். இதனிடையே இந் நீதிமன்றத்தில் பினாங்கு தாமான் செலாமாட் போதைப்பொருள் தடுப்பு முகாமைச் சேர்ந்த 19 நபர்கள் போதைப்பொருள் குற்றத்திற்காக குற்றம் சுமத்தப்பட்டு சிறைச் சாலைக்கு அனுப் பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்