ஏழு வயது சிறுவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் வகையில் செயற்கை போதைப்பொருளைக் கொண்டு உணவுப் பொருட்கள் தயாரிக் கப்பட்டு வருவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி நேற்று அம்பலப்படுத்தினார். மிட்டாய் மற்றும் ரொட்டிகளில் இந்த வகை போதைப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு நிறுவனம் கண்டு பிடித்திருப்பதை உள்துறை அமைச்சருமான அவர் சுட்டிக் காட்டினார். அந்த செயற்கை போதைப்பொருள் சேர்க்கப்பட்ட உணவை சாப்பிட்ட பின்னர் அச் சிறுவர்களின் நரம்பு, சிந்தனை, ரத்த ஓட்டம் ஆகியன பாதிக்கப்படும் என்று அவர் சொன்னார். மலேசிய இஸ்லாமிய பயிற்சி கழகத்தில் இஸ்லாமிய ஆலோசனை மன்றத்தின் கல்வி, சமூக மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற் றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளையோர்களிடையே ஒழுக்கக்கேடு அதிகரித்து வருவதை அரசாங்கம் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய அவர், இதனை சமாளிக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தவும் எண்ணம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்