சிரம்பான்-போர்ட்டிக்ஷன் நெடுஞ்சாலையின் 21.1ஆவது கிலோ மீட்டரில் 5 வாகனங்கள் மோதிக்கொண்டதில் மோட்டார் ஓட்டுநர் பலியானார். காலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 30 வயதிற்கு உட்பட்ட மோட்டார் ஓட்டுநருக்கு தலையிலும் உடலிலும் பலத்தக் காயங்கள் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த கார் மோட்டார் ஓட்டியை மோதியதில் அவர் நெடுஞ்சாலையின் நடுவில் தூக்கி எறியப் பட்டுள்ளார். சாலையில் விழுந்த ஓட்டுநரையும் அவரின் மோட்டாரையும் பின்னால் வந்த மற்றொரு கார் மோதியுள்ளது. இதனால் அக்கார் தீப் பற்றிக் கொண்டதாக போர்ட்டிக்ஷன் மாவட்ட தீயணைப்புப் படையின் தலைவர் முகமட் கடாபி தெரிவித்தார். தீப் பற்றிக் கொண்ட காரையும் மோட்டார் சைக்கிளையும் மோதுவதிலிருந்து தவிர்க்க முயன்ற மற்ற இரு கார்கள் சாலையின் தடுப்பில் மோதியுள்ளன. தீப்பற்றிய காரின் ஓட்டுநர் காரிலிருந்து பாது காப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பலியான மோட்டார் ஓட்டியின் சடலம் பிரேதப் பரி சோதனைக்காக போர்ட்டிக்ஷன் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்