சுற்று வட்டாரத்தில் வீடு புகுந்து திருடும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கேங் பியான் ஜோனைச் சேர்ந்த அறுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் 24 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர். இந்த கும்பலின் தலைவனும் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை யில் சிக்கி உள்ளதாக கோல திரங்கானு மாவட்ட போலீஸ் படையின் துணைத் தலைவர் சுபியான் சுலைமான் தெரிவித்தார். கோலா இபாய், கோல திரங்கானு ஆகிய இடங்களில் நடந்த 6 வீடு புகுந்து திருடும் சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த கும்பல் ஆள் இல்லாத வீடுகளைக் கண்டறிந்து இரவு நேரங்களில் தங்களின் கைவரிசையை காட்டி வந்துள்ளது. இந்த கைது நடவடிக்கையின் மூலம் இவர்கள் திருடிய பலவகை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மடிக்கணினி, தொலைக்காட்சி, கைப்பை போன்ற பொருட்கள் இதில் அடங்கும். வீடுகளை உடைக்க இவர்கள் பயன்படுத்திய கருவிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் மேல் விசாரணை தொடரும் என பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் சுபியான் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்