ஜாலான் கோஸ்டாலிலுள்ள பேரங்காடிக்கு முன் சாலையை கடக்க முயன்ற முதியவரை அவ்வழியே வந்த வாகனம் மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் முகமட் யுசோப் பலாடான் (வயது 72) என்பவர் பலியானார். இங்குள்ள செண்டர்போய்ன்ட் பேரங்காடிக்கு முன் உள்ள சாலையை அவர் கடக்க முயன்றுள்ளார். அவ்வழியே வந்த டொயோட்டா ப்ராடோ ரகக் கார் அவரை மோதித் தள்ளியுள்ளது. இதனால் அவருக்கு தலையிலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. சாலையில் கார் வருவதைப் பார்க்காமல் திடீரென அவர் சாலையைக் கடக்க முயன்றதால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் எம்.சந்திரா தெரிவித்தார். அங்கு விரைந்து வந்த மருத்துவ அதிகாரிகள் முதியவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். கார் ஓட்டுநர் பிரேக்கை அழுத்தியுள்ளார். இருந்தபோதும் காருக்கும் அந்த முதியவருக்கும் இடையிலான இடைவெளி குறைவாக இருந்ததால் கார் அவரை மோதித் தள்ளியுள்ளது என்ற தகவல் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்