கள்ளக் குடியேறிகளுக்கு இ-கார்டு எனும் தற்காலிக அமலாக்க அட்டை வழங்குவது தொடர்பில் அக்குடியேறிகள் சம்பந்தப்பட்ட 13 நாடுகளின் தூதரக அலு வலர்களுக்கு நேற்று இங்கு குடிநுழைவுத் துறையினருடனான சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மலேசியக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் முஸ்தாஃபர் அலி தலைமையில் அக்கூட்டம் நடைபெற்றது. அதில் வங்காள தேசம், துர்க் மேனிஸ்தான், மியன்மார், நேப்பாளம், இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், உஸ்பெகிஸ் தான், பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, வியட்னாம் ஆகிய நாடுகளின் தூதரகங்களைச் சார்ந்த 28 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த இ-கார்டு திட்டத்திற்கு மலேசியாவிலுள்ள பல்வேறு தூதரகங்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதே அக்கூட்டத்தின் பிரதான நோக்கமாகும். இ-கார்டு திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள தங்கள் நாடுகளின் குடிமக்க ளுக்கு கடப்பிதழ் வழங்குவதில் அத்தூதரகங்கள் உதவ முடியும் என மலேசியக் குடிநுழைவுத் துறை நம்புகிறது என முஸ்தாஃபர் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்