img
img

பேசாமல் காலனித்துவ ஆட்சியே இருந்திருக்கலாம்!
வியாழன் 02 மார்ச் 2017 12:58:50

img

மலேசியா முன்புபோல் ஆங்கிலேயர்களின் காலனித் துவ ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டிருக்கலாம் போலிருக்கிறது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் சிலேடையாகக் கூறினார். நாட்டின் தேசிய கார் நிறுவனமான புரோட்டோன் ஹோல்டிங்ஸ் நிறு வனத்தை உரிமை கொண்டாடி வந்த டி.ஆர்.பி. ஹைக்கோம் நிறுவனம் அதனை வெளிநாட்டு கூட்டு நிறுவனத்திடம் விற்றதை தற்காக்கும் வகையில் அவர் தனது அகப்பக்கத்தில் இவ் வாறு கூறியுள்ளார். நான் வெளிப்படையாகச் சொல்கிறேன், ஐரோப்பிய காலனித்துவ நாடு அல்லது மேம்பாடு கண்ட நாடுகளாக நாம் நிலைநிறுத்திக் கொண்டிருந்தால் மலே சியா இன்னும் சிறந்த நாடாக இருந்திருக்கும் என்று அவர் சொன்னார். நாட்டின் நிர்வாகம் மற்றும் மேம்பாடு பற்றி நம்மைவிட அவர்களுக்கு நன் றாகத் தெரியும். மேலும், அவர்கள் இன்னும் சிறந்த முறையில் கார்களைத் தயாரித்து நம்மை தொழில்நுட்பத்துறையில் மேலும் பெருமை கொள்ளச் செய் வார்கள் என்றும் டாக்டர் மகாதீர் சொன்னார். கடந்த 1983-ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது காரான புரோட்டோன் காரை உருவாக்கிய பெருமை முன்னாள் பிரதமரான துன் டாக்டர் மகாதீரையே சாரும். புரோட்டோன் நிறுவனத்தை வாங்குவதற்கு மனு செய்துள்ளதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பி.எஸ்.ஏ. குரூப் எனப்படும் கார் உற்பத்தி நிறு வனம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து டாக்டர் மகாதீர் இவ்வாறு கூறியுள்ளார். சீன நாட்டின் கீலி நிறுவனமும் புரோட்டோன் நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை வாங்குவதற்கு மனு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதனை புரோட்டோன் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. கடந்த 1980ஆம் ஆண்டுகளில் புதிய கார்கள் தயாரிப்பில் புரோட்டோன் நிறுவனம் முன்னணி வகித்து வந்தது. கடந்த 1988ஆம் ஆண்டு புதிய கார்களை விற்பனை செய்வதில் புரோட்டோன் நிறுவனம் 73 விழுக்காடு ஆக்கிரமித்தது. எனினும், சில ஆண்டுகள் கழிந்த பின்னர் அதன் தயாரிப்பில் பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. அதனைத் தொடர்ந்து அதன் விற்பனை சரிந்தது.கடந்த ஆண்டு புரோட்டோன் நிறுவனம் 14 விழுக்காடு மட்டுமே புதிய கார்களை விற்பனை செய்தது. பெரோடுவா 40.3 விழுக்காட்டை ஆக்கிரமித்த வேளை யில், ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் 17.8 விழுக்காட்டு புதிய கார்களை விற்றது. எனினும், புரோட்டோன் காரின் தரம் பலமடங்கு உயர்ந்ததாகவும் டாக்டர் மகாதீர் சொன்னார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img