தனது உறுப்பினர்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பார் என்ற நல்ல நோக்கத்திற்காக தேசிய நில நிதி கூட்டுறவுச்சங்கம் அடிமட்ட விலையில் டத்தோஸ்ரீ சாமிவேலுவிற்கு விற்பனை செய்த சுங்கை சிப்புட் டோவன்பி தோட்டத்தின் 101 ஏக்கர் நிலம், எப்படி சீனர் ஒருவருக்கு சொந்தமான சரிக்காட் ரத்தோஸ் சஞ்சோங் சென்.பெர்ஹாட் நிறுவனத்திற்கு கைமாறியது என்பது குறித்து புலன் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளது. டேவான்பி தோட்டத்தின் நடப்பு சந்தை நில மதிப்பு ஏக்கருக்கு வெ. 68 ஆயிரம் வெள்ளியாகும். சுங்கை சிப்புட்டை சேர்ந்த தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்காக வீடமைப்புத்திட்டத்தை உருவாக்கப் போவதாக கூறி, கடந்த 2005 ஆம் ஆண்டு அந்த கூட்டுறவுக்கழகத்திற்கு சொந்தமான டோவான்பி தோட்டத்திலிருந்து 101 ஏக்கர் நிலத்தை அப்போதைய மஇகா தேசியத் தலைவரும், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சாமிவேலு ஏக்கர் வெ.11,800 க்கு அடிமட்ட விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால், அந்த நிலம் சரிக்காட் ரத்தோஸ் சஞ்சோங் சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் (Syarikat Ratus Sanjung Sdn. Bhd) (No.Pendaftaran: 341300-D) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு யார் சொந்தக்காரர் என்று ஆராய்ந்து பார்த்த போது, எண்.52பி, பெர்சியாரான் கிரின் ஹில் ஈப்போ என்ற முகவரியில் உள்ள ஹூயின் பெங் ஃபாட் (Huen Peng Fatt) என்ற ஒரு சீனருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது என்று ஊழல் தடுப்பு ஆணை யத்தில் செய்யப்பட்டுள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கை சிப்புட்டில் உள்ள தேசிய நில நிதி கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் வீடமைப்புத்திட்டத்திற்காக ஒரு நல்ல நோக்கத்தின் அடிப்படையில் அந்த கூட்டுறவுக்கழகம் அடிமட்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்ட டோவான்பி தோட்டத்தின் 101 ஏக்கர் நிலத்தை டத்தோஸ்ரீ சாமிவேலு எப்படி ஒரு சீன ருக்கு தாரை வார்த்து கொடுக்க முடியும். அதுவும் தேசிய நில நிதி கூட்டுறவுச்சங்கத்தின் விதியின்படி விவசாய நிலத்தை உறுப்பினர்கள் கொள்முதல் செய்வதாக இருந்தால் ஒரு உறுப்பினருக்கு ஒரு லாட் அல்லது ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே வழங்க முடியும் என்ற நியதி இருக்கும் போது, கூட்டுறவுக்கழகத்தில் உறுப்பினரே இல்லாத ஒரு சீன ருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 101 ஏக்கர் நிலத்தை டத்தோஸ்ரீ சாமிவேலு எப்படி விற்பனை செய்துள்ளார் என்பது குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்ய வேண்டும் என்று சுங்கை சிப்புட்டை சேர்ந்த லோகநாதன் த/பெ மாணிக்கம் தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஒரு வேளை அந்த சீனர் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் பினாமியாக இருந்தாலும்கூட, இந்திய கூட்டுறவுக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை டத்தோஸ்ரீ சாமிவேலு எவ்வாறு ஒரு சீனரின் பெயரில் அந்த நிலத்தை வைத்திருக்க முடியும் என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்று அந்தப் புகாரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. டத்தோஸ்ரீ சாமிவேலு தங்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பார் என்ற நம்பிக்கையில்சுங்கை சிப்புட்டை சேர்ந்த மக்கள் பெரிதும் எதிர்பார்ர்த்து காத்திருக்கும் வேளையில் கடந்த 11 ஆண்டு காலமாக அந்த வீடமைப்புத்திட்டம் உருவாவதற்காக ஒரு செங்கல்கூட நகர்த்தப்படாதது ஏன்? இன்னமும் செம்பனைத் தோட்டமாக இருக்கும் அந்த 101 ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்யப்படும் செம்பனை விற்பனைக்கு தேசிய நில நிதி கூட்டுறவுச்சங்கம் மாதம் 30 ஆயிரம் வெள்ளி முதல் 40 ஆயிரம் வெள்ளி வருமானத்தை அந்த சீனருக்கு சொந்தமான Syarikat Ratus Sanjung Sdn. Bhd நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. இந்தியர்களுக்காக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலம் எப்படி சீனருக்கு கைமாறியது? இந்த 101 ஏக்கர் நில விற்பனையில் நடந்துள்ள முறைகேடு குறித்து இதுவரையில் தேசிய நில நிதி கூட்டுறவுச்சங்கத்திற்கு தெரியாது. அந்த Syarikat Ratus Sanjung Sdn. Bhd நிறுவனத்தின் முகவரி 12/B Jalan Pari Garden Ipoh என்பதாகும். அதாவது No. 7, Jalan Pari Garden Ipoh என்ற முகவரியில் உள்ள டத்தோஸ்ரீ சாமிவேலு வீட்டிற்கு அருகில் உள்ள முகவரியாகும். சுங்கை சிப்புட் மக்களுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை ஒரு சீனர் எப்படி சொந்தம் கொண்டாடுகிறார் என்பது குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் ஆராய வேண்டும் என்று தனது புகாரில் லோகநாதன் த/பெ மாணிக்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்