சுங்கை பாரி அரசினர் தமிழ்ப்பள்ளி மற்றும் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி களில் கட்டப்பட்ட இணைக் கட்டடங்கள் நிர்மாணிப்புப் பணிகள் பூர்த்தியாகி சில மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அந்த இணைக் கட்டடங்கள் மாண வர்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்படாதது ஏன் என்று பத்துகாஜா நாடா ளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் கேள்வி எழுப்பினார். மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு இவ்விரு பள்ளிகளிலும் 2015இல் இணைக் கட்ட டங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. சுங்கை பாரி அரசினர் தமிழ்ப்பள்ளியில் அதிகமான மாணவர்கள் பயில் வதால் இரு நேர வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையை போக்குவதற்கு ஒரு நேர வகுப்புகள் நடத்துவதற்கு கூடுதல் வகுப்பறைகள் அவசியம் என்று கருதி இணைக்கட்டடம் நிர்மாணிக்க திட்டமிட்டு கட்டடமும் கட்டி முழுமை பெற்றுள்ள நிலையில் அதன் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. பள்ளி திறக்கப்படாததற்கு பள்ளி நிர்வாகத்தையோ, பள்ளி மேலாளர் வாரியத்தையோ குறை சொல்ல முடி யாது. அவர்கள் தங்கள் கடமையை செய்து வருகின்றனர். இதே போலத்தான் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் வெறுமனே கிடக்கிறது. இவ்விரு பள்ளிகளின் இணைக்கட்டடங்கள் கட்டட பணிகள் பூர்த்தியடைந்து திறக்கப்படாமல் இருப்பதற்கு கார ணம் கோரி கல்வி அமைச்சுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கும் இதுநாள் வரை பதில் இல்லை. பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் சேர்ப் பதற்கு முன் வருவார்கள். கல்வி அமைச்சின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என்று எண்ணத் தோன்று கிறது. இவ்விவகாரத்திற்கு விரைவில் ஒரு தீர்வு காணப்படவில்லை என்றால் இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் என்று கூறினார். அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படும் பள்ளிகளின் நிர்மாணிப்பு தாமதம், கட்டப்பட்ட பள்ளிகள் திறக்கப் படாதது குறித்து மக்கள் பிரதிநிதிகள் என்ற நிலையில் கேள்வி எழுப்ப தகுதி உள்ளது என்று கூறினார். மாணவர் களின் பயன்பாட்டிற்கு தயாராக உள்ள இரண்டு தமிழ்ப்பள்ளிகளின் இணைக் கட்டடங்கள் விரைவில் திறப் பதற்கு கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் விரைவான நடவடிக்கை மேற்கொள்வார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்