பத்துமலையில் சிறுநீரக சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான மப்பதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் மேற் கொள்ளும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா நேற்று கூறினார். இவ்வாண்டு பத்துமலை தைப்பூச விழாவின் மொத்த வரவு 25 லட்சத்து 9 ஆயிரத்து 803 வெள்ளியாகும். இது கடந் தாண்டை காட்டிலும் 2 லட்சத்து 20 ஆயிரத்து 255 வெள்ளி கூடுதல் வரவாகும்.தைப்பூச விழா உட்பட ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் மூன்று ஆலயங்களின் கணக் கறிக்கைகளும் உள் கணக்காய்வாளர், வெளிக் கணக்காய்வாளர்களின் அனுமதி பெற்றபின் ஒவ்வொரு ஆண்டும் சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக் கப்படுகிறது. இந்த கணக்கு வழக்குகளில் எந்தவொரு ஒளிவு மறைவும் இல்லை. அனைத்தும் சட்டத் திட்டத்திற்கு உட்பட்டு தான் செய்யப்படுகிறது. ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு கிடைக்கும் வரவுகளை கொண்டு இது வரை 1 கோடியே 50 லட்சம் வெள்ளியை வங்கி சேமிப்பில் வைத்திருக் கிறோம். இதில் அரசாங்கம் வழங்கிய 20 லட்சம் வெள்ளி நிதியும் அடங்கும். அதே வேளையில் தேவஸ்தான பொறுப்பாளர்களின் அனுமதியுடன் பல சமூக நல கடப்பாட்டின் அடிப்படையில் நிதியுதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் இவ்வாண்டு முதல் 1 லட்சம் வெள்ளியை கல்வி நிதிக்காக தேவஸ்தானம் ஒதுக்குகிறது. கல்வி பயில சிரமப்படும் மாணவர்கள் இந்நிதியை பெற்று பயன் பெறலாம். இந்நிதியை எப்படி, யாருக்கு வழங்குவது உட்பட இதர பணிகளை தேவஸ்தான கல்விக் குழு மேற்கொள்ளும். மேலும் பத்துமலையில் சிறுநீரக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன. பொதுமக்களின் அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பத்துமலையில் சிறுநீரக சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை தேவஸ்தானம் மேற்கொள்ளவுள்ளது. நிர்வாகக் குழு கூட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் பெற்ற பின் அந்நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தேவஸ் தானம் மேற்கொள்ளும்.இதுபோன்று மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை கோரிக்கையாக முன் வைக்கும் போது அதை கருத்தில் கொண்டு பரிசீலனை செய்ய தேவஸ்தானம் தயாராக உள்ளது என்று டான்ஸ்ரீ நடராஜா செய்தியாளர்களிடம் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்