உணவகத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்ததுடன் இறைச்சி வெட்டும் கத்தியை கொண்டு எரிவாயு கலனின் குழாயை வெட்ட முயன்ற ஆடவரை போலீ சார் கைது செய்தனர்.இச்சம்பவம் நேற்று நண்பகல் 12.45 மணியளவில் பெக்கான் சிம்பாங் கோலாவிலுள்ள உணவகத்தில் நிகழ்ந்தது. இச்சம்பவம் நிகழ்ந்தபோது உணவகத்தில் வாடிக்கையாளர்கள் நிறைந்திருந்தனர். இறைச்சி வெட்டும் கத்தியை ஏந்திவந்த 37 வயது ஆடவர் உண வகத்தில் தேநீர் கலக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அவர் வேகமாக கூச்சல் இட்டதுடன் எரிவாயு கலனின் குழாயை வெட்ட முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்களும் அங்கிருந்த பணியாளார்களும் உணவகத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் உணவகத்தின் உரிமையாளர் போலீசுக்கும் தீயணைப்புப் படைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். ஜாலான் ராஜா தீயணைப்பு நிலை யத்திலிருந்து அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் அந்த ஆடவரின் செயலை முறியடிக்க முயன்றனர். நீர் குழாயை கொண்டு அந்த ஆடவரின் செயலை தடுத்தனர். எரிவாயு கலனை கட்டி அணைத்தபடி நின்று கொண்டிருந்த அந்த ஆடவரை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினர். அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தை கைப்பேசியில் பதிவு செய்தவர் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததுடன், சம்பந்தப்பட்ட ஆடவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என வர்ணித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட ஆடவர் மனநில பாதிக்கப்பட்டவர் அல்ல. சில தினங்களுக்கு முன்பு அவரின் கைப்பேசி சம்பந்தப்பட்ட உணவகத்தில் காணாமல் போனதால் அவர் கோபத்தில் இச்செயலை செய்ததாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ரோஸி ஜிடின் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஆடவர் மீது கார் திருட்டு சம்பவம் தொட ர்பில் குற்றப்பதிவு உள்ளது. மேல் விசாரணைக்காக கைது செய்யப்பட்டவர் தடுப்புக் காவ லில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்