ஷமீரா எனும் திருநங்கை கொடூரமான முறையில் சுட்டு, வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான ரகசிய கேமராவின் பதிவு போலீசிடம் கிடைத் துள்ளது.கடந்த வியாழக்கிழமை ஜாலான் பாசாரில் திருநங்கை ஷமீரா கிருஷ்ணன் (வயது 27) கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். முதலில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். அதன் பின்னர் அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வெட்டுக் கத்தியால் வெட்டியுள்ளனர். இதனால் அவரின் தலை இரண்டானதுடன் அவரின் கைவிரல்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் போலீசார் துரித விசாரணையை மேற் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கிடைக்கப்பெற்ற ரகசிய கேமராவின் பதிவை போலீசார் துல்லியமாக கவனித்துள்ளனர். ஷமீராவை மூவர் பாராங் கத்தியால் தாக்கி யுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதலை மேற்கொண்டவர்களின் முகங்கள் ரகசிய கேமராவின் பதிவில் தெளிவாக தெரிய வில்லை என்று பகாங் மாநில குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவர் டத்தோ ராஜா ஷாரோம் ராஜா அப்துல்லா தெரிவித்தார். இதன் தொடர்பில் போலீசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையில் இச்சம்பவம் குறித்து நால்வரிடம் விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.இதனிடையே, கடந்த 2015-ஆம் ஆண்டில் ஷமீரா கடத்தப்பட்டு மிகக்கொடூரமான முறையில் வதை செய்யப் பட்ட சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். அச்சம்பவத்தின் போது, ஷமீராவை கடத்திய இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். இது பற்றிய வழக்கு வரும் மார்ச் மாதம் விசாரணைக்கு வரும் வேளையில், ஷமீரா அதில் முக்கிய சாட்சியாகத் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, அந்த வழக்கிற்கும் இவரின் கொலைக்கும் தொடர் பிருக்கலாம் என்ற சாத்தியத்தையும் போலீசார் மறுக்கவில்லை.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்