img
img

38 வருட காலமாக போராடியும் விடிவு இல்லை!
செவ்வாய் 28 பிப்ரவரி 2017 13:26:02

img

கடந்த 1979 ஆம் ஆண்டு பேரா, பாகான் டத்தோவில் 3,640 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட செம்பனைத் தோட்டம் ஒன்றை வாங்குவதில் முதலீடு செய்த ஏழை தோட்டப் பாட்டாளிகள், அதன் பலாபலன் கிட்டும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். எனது 25 வயதில் இந்த நிலத்தை வாங்குவதற்கு முதலீடு செய்தேன். இப்போது எனக்கு 60 வயதாகிறது. இதுவரையில் எந்தவொரு பணத்தையும் அந்த நிலத்திலிருந்து பார்க்கவில்லை. கண் மூடுவதற்குள் இதற்கு ஒரு விடியல் கிடைக்குமா? எப்போது அந்த விடியல் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்கிறார் அந்த திட்டத்தில் முதலீடு செய்தவர் ஒரு பெரியவர். இந்த நில விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று இங்கு ஈப்போ உயர்நீதி மன்றத்திற்கு வந்தது. இந்த நிலத்தில் முதலீடு செய்த இந்தியர்கள் பெரும் திரளாக வந்திருந்தனர். தங்களுக்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் நீதிமன்ற வாசலில் நின்று இருந்தனர். சுமார் 38 வருடங்களுக்கு முன்பு பாகான் டத்தோ பகுதியில் 3640 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட செம்பனைத் தோட்டம் ஒன்றை வாங்குவதில் முதலீடு செய்தவர்களுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகை பற்றிய கலந்தாய்வு மனு மீதான விசாரணை ஏப்.18ஆம் தேதி இங்குள்ள ஈப்போ உயர் நீதி மன்றத்தில் செவிமடுக்கப்படும் என்று பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சார்பில் ஆஜரான எம்.மனோகரன் மலையாளம் வழக்கறிஞர் நிறுவனத்தின் வழக் கறிஞர் பவளக்கொடி நடராஜா கூறினார். ரெங்கநாதன் தோட்டம் என்று பிரபலமாக அழைக்கப்படும் இத்தோட்டம் எஸ்பிபிகேபி எனும் கூட்டு நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்டது. சுமார் 700க் கும் மேற்பட்டோர் ஒரு லாட் மூன்று ஏக்கர் என்ற விகிதத்தில் நபர் ஒருவர் பத்து லாட்டுகளுக்கு மேல் முதலீடு செய்திருந்தனர். இத்தோட்டம் வாங்கப் பட்டது முதல் நீதிமன்ற வழக்குகளை சந்தித்து வந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பெடரல் நீதிமன்றம் முதலீட்டாளர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. முதலீட்டாளர்களுக்கு உரிய இழப்பீடானது ஈப்போ உயர் நீதிமன்றம் முடிவு செய்யப்படும் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்ய பணிக்கப் பட்டது. பெடரல் மன்றத்தின் தீர்ப்பு உத்தரவு ஆணை அறிக்கையை பெறுவதில் இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நேற்று இம்மனு தாக்கல் செய் யப்பட்டபோது செம்பனைத் தோட்டத்தை கொள்முதல் செய்துள்ள நிறுவனம் கால தாமதமாக மனு தாக்கல் செய்யப்பட்டதை ஆட்சேபித்து மனுவை தள் ளுபடி செய்யக் கோரி பதில் மனு தாக்கல் செய்திருந்தது. எனினும் நேற்று ஈப்போ உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.மனோகரன் மலையாளம் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ந.பவளக்கொடி இவ்வழக்கு மீதான கலந்தாய்வு வரும் ஏப்.18ஆம் தேதி செவிமடுக்கப்பட்டு மறு விசாரணைக்கான தேதி வழங்கப்படுவதற்கு நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது என்று கூறினார். இவ்வழக்கை செவிமடுப்பதற்காக முதலீட்டாளர்கள் பலர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தொடங்கப்பட்ட நடவடிக்கைக் குழுவின் தலைவர் சி.அப்புடு, செயலாளர் நாகப்பன் மூக்கன், பொருளாளர் வீரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 2014இல் பெடரல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் ஆணை அறிக்கையை பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனதற்குரிய காரணத்தை நீதிமன்றத்தில் தெரியப்படுத்தி விட்டோம் என்று நாகப்பன் மூக்கன் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img