பட்டர்வொர்த் துறைமுக பகுதியிலிருந்து இரும்பு உலோகப் பொருட்களை ஏற்றி வந்த கனரக லோரி ஒன்று இங் குள்ள பாகான் டாலாம் சாலையில் குடைசாய்ந்தது. இந்த சம்பவம் நேற்று காலை 9.15 மணியளவில் நடந்தது. சம்பவத்தை நேரில் கண்ட நசீர் அப்துல் ராஷிட் ஜாலான் பாகான் டாலாம் பகுதி வீடொன்றில் இருந்த போது பெரிய சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே வந்து கண்டபோது இரும்பு உலோகத்துடன் கனரக லோரி குடை சாய்ந்ததாக குறிப்பிட்டார். இதனிடையே இந்த பாகான் டாலாம் பகுதியில் கடந்த காலங்களில் 6 தடவை இது போன்று கனரக வாகனங்கள் குடை சாய்ந்துள்ளதாக அவர் மேலும் சொன்னார். சாலையில் அந்த கனரக வானம் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததாக தெரிவிக்கப் பட்டது. இதனால் அச்சாலை சில மணி நேரம் மூடப்பட்டதுடன் 20 பேர் அடங்கிய தொழிலாளர்கள் சம்பவம் நடந்த இடத் தில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள கனரக லோரி நிறுவனம் அனுப் பியதுடன் காலை மணி 10.45 மணி யளவில் அச்சாலை பகுதி போக்குவரத்துக்கு மீண்டும் திறந்து விடப்பட்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்