கடந்த சில நாட்களுக்கு முன்பு குவாந்தானில் நிகழ்ந்த ஷமீராவின் படுகொலை திருநங்கையர் உட்பட பொது மக்களிடையே பரிதாப உணர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில் குறிப்பிட்ட சில ஊடகங்கள் அவரை ‘பொண்டான்’ எனக் குறிப்பிட்டுள்ளது திருநங்கையர் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. இப்படி ஆக வேண்டும் என நாங்கள் யாரும் ஆசைப்பட்டு ஆகிவிடுவதில்லை என்பதையும் எங்களைத் தவறாக அடையாளப்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு அழைக்கும்போது நாங்கள் அனுபவிக்கும் வேதனையின் ஆழம் அதிகமானது என மலேசிய திருநங்கைச் சபையின் தலைவி ஹேமாபானு கோபிநாத் (32) தெரிவித்தார். ஒரு குழந்தை மாற்றுத் திறனாளிகளாகப் பிறந்தால் கூட மார் மீதும் தோள் மீதும் தூக்கி வளர்க்கும் பெற்றோர்கள், தங்களுக்குத் திருநங்கையர் பிள்ளைகளாகப் பிறந்தால் ஏற்றுக்கொள்ளாமல் குப்பைகளைத் தூக்கியெறிந்து விடுகிறார்களே, ஏன்? இப்படி சமூகத்தில் நாங்கள் தவறாக அடையாளப்படுத்துவதற்கு எங்களின் பெற்றோர்களும் ஒரு வகையில் கார ணம்தான். அரவணைக்க அவர்களிருந்தால் இந்தச் சமூகம் எங்களை எள்ளி நகையாடியிருக்காதே! ‘பொண்டான்’, ‘ஒன்பது’ போன்ற சொற்களினால் என் போன்ற திருநங்கையர் அனுபவிக்கும் வலிகளை நிச்சயம் மற்றவர்களால் உணர்ந்திருக்க முடியாது. அதனால், அவ்வளவு எளிதாக எங்களை அப்படி அழைக்கின்றனர். அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ஷமீராவைத் தைப்பூசத்தின்போது சந்தித்தேன். எவ்வளவு திட்டினாலும் அமைதியாக இருப்பாரே தவிர கோபப்படமாட்டார். அவ்வளவு மென்மையானவர். அவரையும் கொடூரமான முறையில் கொலை செய்ய சம்பந்தப்பட்டவர்களுக்கு மனம் வந்ததோ தெரியவில்லை. ஷமீராவின் படுகொலையில் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்த சமயத்தில் குறிப்பிட்ட ஊடகம் ஒன்றும் அவரைப் பொண்டான் எனச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது எங்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் எங்களைத் திருநங்கையர் எனக் குறிப்பிடப்படுவது போல மலாய்மொழியிலும் சில சொற்கள் உள்ளன. அதிகபட்சமாகப் பெயர் சொல்லி அழைக்கப்படுவது வழக்கம். ‘பொண்டான்’ என்பது திருநங்கையர் களைத் தவறாக அடையாளப்படுத்தவும் எள்ளி நகையாடவுமே பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டார். ஹேமபானு தன்னுடைய 13 வயதில் முழுவதுமாகப் பெண்ணாக மாறியுள்ளார். வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அங்கிருந்து கோலாலம்பூருக்கு வந்தவர், பல இன்னல்களுக்கிடையேயும் சவால்களுக்கிடயேயும் நல்லுள்ளங்களின் துணையோடு இன்று வாழ்க்கையில் முன்னேறி உள்ளார். எழுத்தாளருமான அவர் தரையில் வாழும் தாமரை மற்றும் திருநங்கை விடியல் என்னும் நூல்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, திருநங்கையர்கள் தவறாக அடையாளம் காட்டப்படுவது பெரும்பாலும் அவர்களுக்கு ஆபத் தையே ஏற்படுத்துகிறது எனத் திருநங்கை நலன் காக்கும் அமைப்பின் போராளி நிஷா அயூப் தெரிவித்தார். குறிப்பிட்ட சிலரால், சமயங்களால், அதிகாரிகளால், ஊடகங்களால் திருநங்கையர் தவறாக அடையாளப்படுத் தப்படுகின்றனர். தவறாக அடையாளப்படுத்தப்படும் காரணத்தால் சொந்த நாட்டிலேயே பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்வதாகவே உணர்கிறோம். திருநங்கையர் சமூகத்தைத் தவறாக அடையாளம் காட்டுவது அவர்கள் மீதான மனிதத்தன்மையைக் குறைப்ப தாகவே உள்ளது. அவர்களைக் காயப்படுத்துவது நியாயமே என்ற கருத்தையும் பொதுமக்களிேடையே ஏற் படுத்துகிறது. இத்தகைய அபாயகரமான சூழலை எதிர்நோக்கி வருவதால் திருநங்கையர்களில் பெரும்பான்மையானோர் வீட்டை விட்டு தனியே வருவதில்லை. அதுமட்டுமின்றி, திருநங்கையர் மீதான தாக்குதல்கள் குறித்து காவல் துறையில் செய்யப்படும் புகார்கள் அலட்சியமாகவே கையாளப்படுகின்றன. சில புகார்களில் பாதிக்கப் பட்டவர்கள் திருநங்கையராக இருந்தாலும் கூட அவர்களே குற்றவாளியாக்கப்படுகிறார்கள். இதன் காரண மாகவே சில திருநங்கையர்கள் புகார் செய்வதற்கே அஞ்சுகின்றனர் என அவர் குறிப்பிட்டார். கடந்த 2015ஆம் ஆண்டில் தனக்கு ஏற்பட்ட தாக்குதல் குறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டபோது அலட்சியமாகத்தான் நடத்தப்பட்டதாகவும் வழக்கறிஞர் நண்பரை உடன் கொண்டு சென்ற பிறகே காவல்துறையினர் அதனை வழக்காகப் பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிஷா இரு ஆடவர்களால் காயம் ஏற்படு மளவிற்கு இரும்பால் தாக்கப்பட்டுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்