போலீஸ் தடுப்புக் காவலில் கைதிகள் மரணமடையும் சம்பவங்களை தடுப்பது குறித்து அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என வழக்கறிஞர்கள் சாடியுள்ளனர். கிள்ளான் போலீஸ் நிலையத்தில் பாலமுருகனின் திடீர் மரணம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய வேளையில், உலு சிலாங் கூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் தனசீலன் முனியாண்டி மரணமடைந்தது சட்டத்துறை தன் கடமையைச் செய்கின்றதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இப்பிரச்சினைகளை களைய வேண்டும் என்பதில் அதிகாரிகளுக்கு அக்கறை இல்லை அல்லது அவர்கள் தீவிரம் காட்டவில்லை என்பதற்கு கடந்த காலங்களில் நிகழ்ந்த தடுப்புக் காவல் மரணங்களின் விசாரணை அல்லது தண்டனையில் நிலவும் குளறுபடிகள் ஆதாரமாகும். தடுப்புக் காவல் மரணங்களுக்கு மூல காரணமே, இதுபோன்ற சம்பவங்களுக்கு முடிவு காண வேண்டும் என்ப தில் அரச மலேசிய போலீஸ் படையும் அரசாங்கமும் அக்கறை கொள்ளவில்லை என்பதுதான் என்று வழக்கறி ஞர்கள் சுதந்திர அமைப்பின் இயக்குநர் எரிக் பால்சன் கூறுகிறார். கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ள தடுப்புக் காவல் மரணங்கள் எத்தனை? எத்தனை போலீஸ் அதிகாரிகள் உண்மையில் தண்டிக்கப்பட்டுள்ளனர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்? கிள்ளான் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் மரணமடைந்த இரண்டே வாரத்தில், உலுசிலாங்கூர் போலீஸ் தடுப்புக் காவலில் 43 வயது தனசீலன் இறந்து கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டார். வயிற்று வலி காரணமாக தன சீலனை போலீசார் கோலகுபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்து போலீஸ் நிலையம் திரும்பிய தனசீலன், சில மணி நேரங்களுக்குப் பிறகு சனிக்கிழமை அதிகாலை 1.50 மணிக்கு புக்கிட் செந் தோசா போலீஸ் நிலையத்தில் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த காலங்களில் இதுபோன்ற தடுப்புக் காவல் மரணங்களில் போலீசார் சம்பந்தப்பட்டிருப்பதும், இதில் குற்றத் தன்மை இருப்பதும் பல விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ள போதிலும், அந்த அதிகாரிக்கு எதிராக எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பால்சன் சுட்டிக்காட்டினார். போலீஸ் தரப்பில் குற்றத்தன்மை இருப்பது பல்வேறு விசாரணைகளில் உறுதியான தீர்ப்புகள் கிடைத்துள்ள போதிலும், அல்லது குறைந்தபட்சம் தடுப்புக்காவல் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் இருந்துள்ள போதிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தடுப்புக்காவல் கைதிகளான சுகுமார், சந்திரன், கருணாநிதி ஆகியோரின் மரண விசாரணை தீர்ப்புகள் இதற்கு உதாரணம் என்றார் அவர். இம்மூவர் சம்பந்தப்பட்ட விசாரணைகளிலும் போலீஸ்தான் காரணம் என்று நீதி மன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. சட்டத்துறை அலுவலகமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பால்சன் வலியுறுத்தினார். கருணாநிதி வழக்கில் மரண விசாரணை முடிவுகளை திசை திருப்ப முயன்றதன் வழி நீதி நலன்களுக்கு எதிராக பல சந்தர்ப்பங்களில் சட்டத்துறை அலுவலகம் செயல்பட்டுள்ளது என்று பால்சன் குற்றஞ்சாட்டினார். சட்டத்துறை அலுவலகம் பற்றியும் நாம் கேள்வி கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்புக் காவல் மர ணச் சம்பவங்களை ஏன் அவர்கள் கடுமையாகக் கருதுவது கிடையாது? உதாரணமாக, கருணாநிதி வழக்கில் கிடைத்த ஆதாரபூர்வமான தீர்ப்பை வைத்து நடவடிக்கை எடுப்பதை விடுத்து, சட்டத்துறை அலுவலகம் அதை திசை திருப்ப முயன்றது. அவர்களின் இச்செயல் நிச்சயமாக பொதுமக்கள் நலன் சம்பந்தப்பட்டது அல்ல என்றார் அவர். நான்கு நாட்களுக்கு முன்பு, சிரம்பானில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. போலீசாரும் மற்ற கைதிகளும் தாக்கியதன் விளைவாக ஒரு கைதி மரணமடைந்தார் என்பது தீர்ப்பானது. ஆனால், சட்டத்துறை அலுவலகமோ அந்த தீர்ப்பை மாற்றுவதற்கு விண்ணப்பம் செய்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பி.கருணாநிதி வழக்கில் அவரின் குடும்பத்தாரை பிரதிநிதித்த வழக்கறிஞர் பால்சன் ஆவார். இதனிடையே, தன சீலனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்