புக்கிட் தாகார் நைகல் கார்டினர் தோட்டம் புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து 15 குடும்பங் களைச் சேர்ந்த 70 உறுப்பினர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு பள்ளி மண்டபத்தில் இருப்பது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பள்ளி மண்டபத்தில் எந்த வசதியும் இல்லாமல் நாங்கள் குழந்தைகளுடன் முறையான படுக்கை வசதி இல்லா மல் உணவு மட்டும் கொடுத்தால் போதுமா? உடனடியாக புயலால் பாதிக்கப்பட்ட எங்களின் குடியிருப்புகளை சீர மைத்து கொடுக்காமல் காலம் கடத்துவது முறையாகுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இது பற்றி தோட்டத் தொழிற்சங்கத் தலைவர் நீலவண்ணனிடம் கேட்டபோது நீலவண்ணன் தமது செய்தியில், புயலால் பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேருக்கு உதவிகள் செய்து பள்ளி மண்டபத்தில் சேர்க் கப்பட்டுள்ளார்கள். அவர்களின் வீடுகளை உடனடியாக சீரமைத்து கொடுக்கும்படி தோட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டதன் பேரில் தோட்ட நிர்வாகம் இருவரை பழுது பார்க்கும் படி கூறியும் பழுது பார்ப்பவர்கள் மிகவும் தாமதமாக செய்து வருவதால் இன்னும் எத்தனை நாளைக்குள் முடிப்பார்கள் என்பதும் தெரிய வில்லை. எங் களின் தொழிலாளர்கள் படும் வேதனையை பார்க்க முடியவில்லை என்று கூறியவர் துணையமைச்சர் கமல நாதன் தொழிலாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்ததுடன் வீடுகளை பார்ப்பதற்கு நிர்வாகம் ஒப்புக் கொள்ளாததால் அவர்களின் முயற்சியை கை விட்டனர். மேலும் சிலாங்கூர் மாநில தொழிற்சங்கம் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி விரைவாக வீடு களை பழுது பார்க்கும் படி கூறுகிறோம் என்று தெரிவித்துள்ளனர். எப்போது வீடு பழுது பார்ப்பார்கள் எப்போது நாங்கள் மண்டபத்தை விட்டு செல்வோம் என்ற நிலையில் உள்ளோம் என்று நீலவண்ணன் தெரிவித்தார். உணவு மற்ற உதவிகள் எங்களுக்கு கிடைத்தாலும் முதியவர்கள் உடல் நலம் குன்றியவர்களின் நிலையையும் நாங்கள் யோசிக்க வேண்டியுள்ளது என்று நீலவண்ணன் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ம.இ.கா.வும், பிகேஆர் கட்சியும் அன்றாடம் உணவு வழங்கி வருவதாக தெரிவித்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்