கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்புச் சுவரை மோதியதில் அதன் ஓட்டுநர் அருகிலுள்ள கால்வாயில் தூக்கி எறியப்பட்டுள்ளார். கோத்தா டாமன்சாராவில் நேற்று நண்பகல் 12.40 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் குவே சின் எங் (வயது 60 ) உயிரிழந்தார். சுமார் 2 மீட்டர் ஆளம் கொண்ட கால்வாயில் அவர் விழுந்துள்ளார். அவர் ஓட்டி வந்த ஹோண்டா ஈஎக்ஸ்5 ரக மோட்டார் சைக்கிள் தடுப்புச் சுவரில் சிக்கிக் கொண்டது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் அங்கு விரைந்ததாக சுங்கை பூலோ மாவட்ட தீயணைப் புப் படையின் தலைவர் முகமட் சப்ரி ஏ சம்சூடின் தெரிவித்தார்.அங்குச் சென்று பார்க்கையில் விபத்துக்குள் ளான முதியவர் கால்வாயில் கிடந்தார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அவரை மேலே கொண்டு வந்தனர். அங்கு வந்திருந்த மருத்துவ அதிகாரி அவரை சோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. மரண முற்ற முதியவரின் சடலத்தை போலீசாரிடம் ஒப்படைத்ததாக முகமட் சப்ரி தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்