சட்டவிரோதமாக கார்களை நிறுத்தும் இடங்களில் கட்டணங்களை வாங்கும் கும்பலின் நடவடிக்கை தலைநக ரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கார் நிறுத்தும் இடங்களை இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் பாதுகாத்து வருவதாக கூறி வாகன ஓட்டிகளிடமிருந்து பணத்தை வசூலித்து வருகின்றனர். குறைந்த பட்சம் ஒரு வாகனத்திற்கு வெ.2 வரை வசூலித்து வருகின்றனர். அதிலும் இரவு நேரங்களில் இந்த கட்டணம் பலமடங்கு அதிகரிக்கப்படுகிறது. கட்டணத்தை செலுத்த மறுக்கும் வாகன ஓட்டிகளை இவர்கள் மிரட்டியும் பணத்தை பெறுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை செய்யும் கும்பலின் பின்னால் குண்டர் கும்பலின் ஈடுபாடும் உள்ளது. இந்த நடவடிக்கையை முறியடிக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் சட்ட விரோதமாக கார்கள் நிறுத்தும் இடங்களில் பணத்தை வசூலித்து வந்த 12 பேரை கைது செய்துள்ளதாகவும் கோலாலம்பூர் போக்குவரத்து துறையின் தலைமை அதிகாரி முகமட் நஸ்ரி உசேன் தெரிவித்தார். நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் இந்த சிறப்பு நடவடிக்கையை கோலாலம்பூர் போக்குவரத்து துறை யின் சிறப்புப் படையைச் சேர்ந்த 25 அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 12 பேர் மீது மேற் கொள்ளப்பட்ட சோதனையில் 4 பேர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்ததாக முகமட் நஸ்ரி தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்