டாக்சியை நிறுத்தி விட்டு, உள்ளே உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென கார் தீப்பற்றிக் கொண்டதில் இணைபிரியா நண்பர்கள் இருவர் கருகி மாண்டனர். இத்துயரச் சம்பவம் நேற்றுக் காலை 8.15 மணியளவில் பினாங்கு இரண்டாவது சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா பாலத்தின் 2.7 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது. சம்பவத்தின் போது ஜார்ஜ்டவுனிலுள்ள உணவகமொன்றில் சாப்பிட்டு விட்டு பத்து கவான் நோக்கி வந்து கொண்டிருந்த போது நிகழ்ந்த இத்தீ விபத்தில் டாக்சியை ஓட்டி வந்த சரவணன் த/பெ கோபாலகிருஷ்ணன் (வயது 28), பக்கத்தில் அமர்ந்து வந்த சோலமன் த/பெ தங்கதுரை (வயது 26) இருவரும் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் கருகி உயிரிழந்தனர். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படையினர், சுமார் 25 நிமிடத்தில் தீயை அணைத் தனர். பேரா சித்தியவான் கம்போங் செலாமாட்டைச் சேர்ந்த த.சோலமன் பினாங்கில் தங்கி தொழிற்சாலையொன்றில் சீனியர் டெக்னீசனாக வேலை செய்துவந்தார் என குடும்பத்தினர் தெரி வித்தனர். தென் செபராங் பிறை பத்து கவான் தாமான் டேசா பெர்மாயைச் சேர்ந்த கே.சரவணன், சிம்பாங் அம்பாட் தாசேக் பெர்மாய் தேசியப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார் என அவரது தந்தை கோபாலகிருஷ்ணன் கண்ணீருடன் கூறினார். அடையாளம் தெரியாத நிலையில் உடல்கள் கருகிவிட்டதால் மரபனு சோதனைக்காக சடலம் சுங்கை பாக்காப் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்