தகவல்களை எளிதில் அடையத்தக்க ஒரு காலகட்டத்தில் இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது நடந்த கொடுமைகள் குறித்த ஓர் ஆவணப்படத்தை தணிக்கை வாரியத்தின் அனுமதியின்றி திரையிட்ட தற்காக பூசாட் கோமாஸின் நிகழ்ச்சி தயாரிப்பு மேலாளர் லீனா ஹென்றி குற்றவாளி என முடிவு செய்யப்பட்டதில் அர்த் தம் ஏதுமில்லை என ஜசெகவின் எம்.குலசேகரன் கூறியுள்ளார். உலகளவில் நிகழ்கிற கொடுமைகள் குறித்து தகவல்களை ஊடகங்கள் அல்லது கைத்தொலைபேசி வழியாக எளிதில் அடைய முடியும் என்றார் அவர். அதிலும் ஹென்றி அந்த ஆவணப்படத்தை சொந்தமாக வைத்திருக்கவில்லை. அதனால் அவர் மீதான குற்றச் சாட்டுகள் படத் தணிக்கை சட்டத்தின் பிரிவு 6இன் கீழ் வராது. அவ்வாறு செய்வ தெனில் கைத் தொலைபேசி களின் மூலம் உலக விஷயங் களை பரவச் செய்வோருக்கு எதிராக அரசாங்க நடவடிக்கை எனும் நிலை இருக்க வேண்டும் என ஜசெக தேசிய உதவித் தலைவரும் ஈப்போ பாராட் தொகுதி மக்களவை உறுப்பி னருமான அவர் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட ஆவணப் படத்தை தணிக்கை வாரிய ஆய்வு அனுமதியின்றி கோலா லம்பூர் சிலாங்கூர், சீன வர்த்தக சங்க மண்டபத்தில் கடந்த 2013 ஜூலை 13 இல் திரையிட்டதாக லீனா ஹென்றி மீது குற்றம் சாட்டப் பட்டது. வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் லீனா ஹென்றிக்கான தண்டனை விவரம் மார்ச் 22இல் அறிவிக்கப்படவுள்ளது. லீனா ஹென்றி எனும் அம்மாது மூன்றாண் டுக்கு மேற் போகாத சிறைத் தண்டனை அல்லது வெ.30 ஆயிரத்திற்கு மேற்போகாத அபராதத்தை எதிர்நோக்கி யுள்ளார். -எப்எம்டி
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்