குவாந்தானில் ஷமீரா கிருஷ்ணன் என்ற திருநங்கை படுகொலைச் சம்பவத்திற்கும், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கும் சம்பந்தம் இருக் கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசார ணையை முடுக்கி விட்டுள்ளனர். ஷமீரா கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் அவர்தான் முக்கியமான சாட்சியாவார். அந்த கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கு செவி மடுப்பு அடுத்த வாரம் ஷா ஆலமில் நடைபெறவிருந்த நிலையில், ஷமீரா கிருஷ் ணன் படுகொலை செய்யப் பட்டிருப்பது இந்த சந் தேகத்தை மேலும் வலுப்படுத் துவதாய் அமைந்துள் ளது. 26 வயதான ஷமீராவைக் கடத்திய பி.கணேசன் மற்றும் எஸ். விக்னேஸ்வரன் ஆகிய இருவரும், செக்ஷன் 3 (1) கடத்தல் சட்டத்தின் கீழ் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு ஆண் டுகளுக்கு முன், கிள்ளா னில் பி. சிலம்பரசன் எனும் இயற் பெயர் கொண்ட ஷமீரா மேற்கண்ட இருவரால் கடத்தப்பட்டார். எனினும், காரில் கடத்திக்கொண்டு போகும் வழியில் மற்றொரு வாகன த்துடன் மோதி சிறிய விபத்து ஏற்பட்ட போது, அவ்விருவரும் விபத்தில் சிக்கிய மற்றொரு கார் ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அங்கு வந்த போலீசார் காரின் பின் சீட்டில், ஷமீரா கைகள் கட்டப்பட்டிருப் பதைக் கண்டு அவரை மீட்டனர். இதனை யடுத்து கணேசன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். இவ்வழக்கில், ஷமீரா கிருஷ்ணன் தான் முக்கிய சாட்சி என தென்கிள் ளான் மாவட்ட போலீஸ் தலைமை யகமும் உறுதி செய்துள்ளார். இதனி டையே, அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் இவ்வழக்கை வாபஸ் பெற்று விடலாமா என்ற யோசனை ஷமீராவிற்கு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தான், ஷமீரா கிருஷ்ணன் கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் உணவு வாங்குவ தற்காக குவாந்தான், ஜாலான் பாசார் அருகே சென்ற போது, அவர் துப்பாக் கியால் சுடப்பட்டும், கைவிரல்கள் துண் டிக்கப்பட்டும், தலையில் பலத்த காயங்களுடனும் இறந்து கிடப் பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின் றனர். மிக கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஷமீரா உடல் அவர் பிறந்த தினமான நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை பகாங், காராக்கில் தகனம் செய் யப்பட்டது. உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு தங் கள் சோகத்தை வெளிப்படுத் தினர். ஷமீரா குவாந்தானில் ஒரு பூக்கடையில் வேலை செய்து வந்தார். ஷமீராவின் இழப்பு, திரு நங்கை சமூகத்திற்கு பேரிழப்பு என்று வர்ணிக்கப்பட் டுள்ளது. திருநங்கை நலன் காக்கும் அமைப்பைச் சேர்ந்த நிஷா அயோப் கூறு கையில் ஷமீரா மிக அழகானவர் மட்டுமல்ல. கல கலப்பாக பழகக்கூடியவர் என் றார். தாம் கிள்ளானில் இருந்த சமயம், மீரா என்ற பெயரில் ஷமீ ராவும் தன்னுடன் இருந்ததாகவும் நிஷா அயோப் நினைவு கூர்ந்தார். ஷமீராவின் மற்றொரு தோழி கூறுகையில் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு ஷமீரா கடத் தப்பட்ட போது அது அவருக்கு ஒரு துரதிர்ஷ்ட மான தினம்தான் என்று சொல்ல வேண்டும் என்றார். 9-2-2015 அன்று ஷமீரா கடத்திச் செல்லப் பட்டார். அவர் கடத்தப்படுவதற்கு முன்பு அவரை கடத்தல்காரர்கள் பாலியல் ரீதியில் துன் புறுத்தியுள்ளனர். அவர் நிர்வாணமாக்கி, கைகால் களை முள்வேலி கம்பியி னால் கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் அவரின் உறுப்பில் போத்தல் களை திணித்துள்ளனர். அதன் பின்னர் அவரின் மார்பக காம் புகளை பிளையரைக் கொண்டு திருகி அவரை ரணப்படுத்தி, வலி தாங்க முடியாமல் அவர் கதறித் துடித்த போது அதனை கண்டு கடத்தல்காரர்கள் மகிழ்ந்திருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் ஷமீரா மிகுந்த மன உளைச்ச லுக்கு ஆளாகி வந்ததையும் அந்த தோழி நினைவு கூர்ந்தார். தன் உயிருக்கு ஆபத்து காத்தி ருக்கிறது என்பதையும் அவர் அறிந்திருந்தார்.இந்நிலையில் அவர் கடத் தப்பட்ட வழக்கு விரை வில் விசாரணைக்கு வருவதை அறிந்து எதிரிகள் அவரை மறுபடியும் துன்பு றுத்தி சுட்டுக்கொன்று இருக்க லாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாக அந்தத் தோழி தெரிவித்தார். பொது வாகவே மலே சியாவில் உள்ள 67 விழுக்காடு திரு நங்கைகள் பாலியல் வன்கொ டுமைப் படுத்தப்படு கின்றனர் என்று ஆய் வுகள் காட்டுகின்றன.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்