வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரரான கிம் ஜோங் நாம்-மைப் படுகொலை செய்வதற்கு நரம்பு மண்ட லத்தைப் பாதிக்கும் சக்தி வாய்ந்த வி.எக்ஸ் இரசாயன திரவம் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, இந்த கொடிய விஷ பாதிப்பு எதுவும் பரவிவிடாமல் தடுக்கும் நடவடிக்கையாக, கே.எல்.ஐ.ஏ 2 விமான நிலையத்தைச் சுத்தப்படுத்த அணுசக்தி நிபுணர்களின் உதவி நாடப்படும் என அரச மலேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் தெரிவித்தார். அக்கொடிய விஷத்தின் பாதிப்பு இன்னும் சம்பந்தப்பட்ட பகுதியில் இருக்கக்கூடும். எனவே, அதனைச் சுத்தப் படுத்துவதற்கு அணுசக்தி நிபுணர்களின் உதவி நாடப்படும். எனினும், இதனால், கே.எல்.ஐ.ஏ விமான நிலையத் தைத் தவிர்க்க வேண்டும் என்பது அர்த்தமில்லை என்றார் அவர். வி.எக்ஸ் திரவம் இரசாயன போர் ஆயுதமாக மட்டுமே அறியப்பட்டுள்ளது என ஏஎப்பி தகவல் கூறுகிறது. நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் எல்லா நச்சுக்களையும் விட வி.எக்ஸ் இரசாயன நச்சு மிகவும் சக்தி வாய்ந்தது என அமெரிக்க அரசாங்கத்தின் நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையத்தை அத்தகவல் மேற்கோள் காட்டியுள்ளது. இதனிடையே வி.எக்ஸ் நச்சை பெருமளவில் உள்ளிழுக்கும் நிலையில் அது 15 நிமிடத்தில் மரணம் விளை விக்கக்கூடியது என அமெரிக்க ராணுவத்தின் எட்ஜ்வூட் இரசாயன உயிரியல் மையத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர் தகவல் வெளியிட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்