நேற்று முன்தினம் இரவு 9.40 மணியளவில் ஆம்புலன்ஸ் வண்டியுடன் டொயோட்டா இன்னோவா வாகனம் மோதிய சம்பவத்தில் ஆம்புலன்ஸ் வண்டி கவிழ்ந்ததோடு அதன் ஓட்டுநர் மருந்தக தாதி ஆகியோர் காயமடைந்தனர். ஸ்ரீ ஹாலாம் ஜாலான் பெர்சியாரான் சாலை சந்திப்பு விளக்குப் பகுதியில் அவ்விபத்து நிகழ்ந்ததாக நேற்று இங்கு தெரிவித்த ஸ்ரீ ஹாலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜோக்கிரி அப்துல் அஸிஸ் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனை சுல்தான் இஸ்மாயில் மருத்து வமனைக்கு சத்த ஒலியுடன் அந்த ஆம்புலன்ஸ் வண்டி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்தார். மாசாயிலிருந்து சுகாதார மருந்தகத்திலிருந்து அந்த ஆம்புலன்ஸ் வண்டி சென்று கொண்டிருந்த போது சாலை சந்திப்பின் இடது புறத்திலிருந்து வந்த வாக னம் நிற்காமல் செல்லவே அந்த விபத்து ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த விபத்தைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வண்டி கவிழ்ந்ததாக குறிப்பிட்ட ஜோக்கிரி அப்துல் அஸிஸ் அச்சம்பவத்தால் வண்டியிலிருந்து நோயாளிச் சிறு வன், அவனின் தாயாருக்கும் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். வாகனமோட்டியும் அவ்விபத்தில் காயத்திற்கு இலக்கானார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்