தங்கும் விடுதி குத்தகை பங்கீட்டிலும் செம்பனை விற்பனையிலும் வெ.830,000ஐ தவறாகப் பயன்படுத்தியதில் 7 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி யுள்ள முன்னாள் ஆசிரியரும் நிதி பேச்சுவார்த்தையாளருமான அகமட் அமீருடின் முகமட் (46) இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் இதற்கு முன்பு 3 வெவ்வேறு நீதிமன்றங் களில் முன்னிறுத்தப்பட்டாலும் குற்றங்களை ஒப்புக்கொள்ளாமல் மேல்முறையீட்டைச் செய்துள் ளார். முகமட் ஜைலானி அப்துல் ரசாக் (42) என்பவரை தங்கும் விடுதி குத்தகை பங்கீட்டிலும் செம்பனை விற்பனை பங்கீட்டிலும் ஏமாற்றிய குற்றத்திற்காக அவர் இந்தக் குற்றச் சாட்டை எதிர்நோக்கி உள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட் டால் குற்ற வாளிக்கு அதிகபட்ச மாக 5 ஆண்டு சிறைத்தண்டனை யும் பிரம்படியும் அபராதமும் தண் டனைகளாக விதிக்கப்படலாம். இந்த வழக்கு மார்ச் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட் டுள்ளதோடு குற்றம் சாட்டப்பட் டவர் வெ.30,000 ஜாமினில் வெளி வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்