ஆப்பிரிக்க நபர்களின் காதல் மோசடி நடவடிக்கையால் உள்ளூர் பெண்கள் 59 லட்சம் வெள்ளி வரை இழப்பை சந்தித்துள்ளனர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ்படைத் தலை வர் முகமட் சுக்ரி நேற்று கூறினார். சமூக வலைத்தளங்களின் மூலம் காதலிப்பதாக கூறிக் கொண்டு பணம் பறிக்கும் கும்பல்களின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.ஆப்பிரிக்க, நைஜீரியா நாடுகளில் இருந்து இங்கு வந்த ஆட வர்களில் அதிகமானோர் இங்குள்ள பெண்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். இக்கும்பல் இளம் பெண்கள், தனித்து வாழும் தாய்மார்கள், நிபுணத்துவ பணிகளில் ஈடுபட்டி ருக்கும் பெண்கள் குறிப்பாக மருத்துவர்கள், வழக்கறிஞர்களை சமூக வலைத் தளங்களின் மூலம் தொடர்பு கொள்கின்றனர்.சமூக வலைத் தளங்களின் மூலமாகவே காதல் வார்த்தை களைப் பேசி அப்பெண்களை மயக்குகின்றனர். பெண்களின் கவர்ச்சிப் படங்கள் கையில் சிக்கும் போது உடனே அக்கும்பல் பணத்தைக் கேட்டு மிரட்டுகின்றனர். படங்கள் வெளியாகாமல் இருப்பதற்கு அப்பெண்கள் பணத்தை கொடுத்து ஏமாந்து போகின்றனர் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் 35 புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவ்வாண்டு இரண்டு மாதங்களில் மட்டும் 4 புகார்களை போலீசார் பெற்றுள்ளனர். கிடைக்கப் பெற்ற புகார்களின் அடிப்படையில் இதுவரை 59 லட்சத்து 39 ஆயிரத்து 920 வெள்ளியை பாதிக் கப்பட்டவர்கள் இழந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.இதனிடையே கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 4 மணியளவில் டாங் வாங்கி போலீஸ்படையின் வணிக குற்றப் பிரிவினர் காஜாங்கில் உள்ள அடுக்கு மாடி குடியிருப் பில் அதிரடி சோதனையை நடத்தினர். இச்சோதனையின் போது 35 வயது முதல் 37 வயதுக்குட்பட்ட இரண்டு நைஜீரிய ஆடவர்கள் உட்பட மூன்று உள்நாட்டுப் பெண்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவ்வீட்டில் இருந்து அதிகமான ஏடிஎப் அட்டை கள், கைத்தொலைபேசிகள், மடிக் கணினிகள் உட்பட பல பத்திரங்களை போலீசார் கைது செய்தனர் என்று அவர் கூறினார். காதல் மோசடி குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இந்த ஐவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1 வருடத் தில் இருந்து 10 வருடம் வரை சிறைத் தண்டனையுடன் ஒரு பிரம்படியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்