சீனப் பெருநாளை முன் னிட்டு கடந்த ஜனவரி 21ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 5ஆம் தேதி வரையில் கார் ஓட்டு நர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் (ஓப்ஸ் டிபிசி) ஏறக்குறைய 2,215 சம்மன்களை பேரா சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) வெளியாக்கி உள்ளது. சாலை வரி காலாவதியா னது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, காப்புறுதி இல்லாதது என பல குற்றங்க ளின் அடிப்படையில் இந்தச் சம்மன்கள் வெளியாக்கப்பட் டுள்ளதாக பேரா ஜேபிஜேயின் இயக்குநர் முகமட் ஜாவாவி ஜக்காரியா தெரிவித்தார். இதனிடையே, 4,796 பேருந் துகள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 30 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவற்றில் 4 பேருந்து ஓட்டுநர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருப்பதும் கண்டறி யப்பட் டதாக நேற்று இங்குள்ள ஜாலான் சித்தியவான்-லூமூட் டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப் பிட்டார். ஜாலான் சித்தியவான்- லூமூட் மற்றும் ஜாலான் மெம் பீசாங்-ஸ்ரீ மஞ்சோங் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப் பட்ட ரெந்தாஸ் செம்பாடான் பரிசோதனை நடவடிக்கையில் சோதனை செய்யப்பட்ட 811 வாகனங்களில் 115 வாகனங் களுக்கு 266 சம்மன்கள் வழங்கப் பட்டன. 23 நபர்களிடம் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட் டதில் ஐவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பதாக நம்பப் படுகிறது. மேலும், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி அறி முகப்படுத்தப்பட்ட அந்நிய கார் ஓட்டுநர்கள் மீதான பரிசோ தனை நடவடிக்கையின் கீழ் 3 அந்நிய நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்