கார் கண்ணாடிகளை உடைத்து நூதனமாக கொள்ளையிட்டு வந்த காதல் ஜோடியின் செயலை போலீசார் முறி யடித்தனர். கோல திரெங்கானு, ச்சாபாங் தீகா வீடமைப்புப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் கண்ணாடி களை உடைத்து கொள்ளையிட்டு வந்த காதல் ஜோடியை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இந்த கைது நடவடிக்கையின் வழி சம்பந்தப்பட்ட ஜோடியிடமிருந்து 69 பணப்பட்டுவாடா அட்டைகள் உட்பட பல் வேறு ரகத்திலான கைப்பேசிகளையும் போலீசார் கைப்பற்றியதாக திரெங்கானு மாநில குற்றவியல் பிரிவின் தலைவர் ஏசிபி வான் அப்துல் அஜிஸ் வான் அம்சா தெரிவித்தார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட காதல் ஜோடி கோலதிரெங்கானு, மாராங், கோத்தா பாரு, கிளந்தான் ஆகிய பகுதி களில் கொள்ளையி ட்டு வந்தது விசாரணையில் தெரி யவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்