பேரங்காடிகளில் கொள்ளையிட்டு வந்ததாக நம்பப்படும் கேங்தெபோக் கும்பலைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கம்போங் ஜாவா, ஷா ஆலம் ஆகிய இரு பகுதிக ளில் போலீசார் திடீர் சோதனை நடத்தியதாக திரெங் கானு மாநில குற்றப் புலனாய்வுத் தலைவர் ஏசிபி வான் அப்துல் அஜிஸ் தெரிவித்தார். இச்சோ தனை நடவடிக்கையின் போது 24 வயது முதல் 38 வயதுக்குட்பட்ட அந் நிய நாட்டைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு கொள்ளைச் சம்பவங் கள் தொடர்பில் கைது செய்யப் பட்ட மூவரும் போலீசாரால் தேடப்பட்டு வந்த வர்களாவர். இந் நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெ.11,000 ரொக்கப் பணம், கதவுகளை உடைப்பதற்கு பயன்படுத்த ஆயு தங்கள் உட்பட ஹோண்டா ரகக் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதற் கிடையே கைது செய்யப் பட்ட மூவரும் செக்ஷன் 457 குற்றவியல் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்பட்டு வரு வதாகவும் ஏசிபி வான் அப்துல் அஜிஸ் தெரிவித்தார். இந்த கைது நடவடிக்கையின் வழி மாராங் வட்டாரத் திலுள்ள பேரங் காடி களில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவங்களுக்கு தீர்வு காணப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்