கொள்ளை போதைப் பொருள் குற்றங்களில் ஈடுபட்டு வந்த கறுப்பு கும்பலைச் சேர்ந்த ஐவரை கோத்தா கினபாலு போலீஸ்படை யினர் கைது செய்தனர்.சபாவில் இக்கறுப்பு கும்பலைச் சேர்ந்தவர்கள் கொள்ளை, கார் திருட்டு, போதைப் பொருள் விற் பனை உட்பட பல குற்றச் சம் பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இக்கும்பலை முறியடிக்கும் நோக்கில் கோத்தா கினபாலு போலீஸ்படையினர் பல மாதங்களாக நடவடிக் கைகளை மேற்கொண்டு வந்தனர் என்று அதன் துணை போலீஸ்படைத் தலைவர் எம். சந்திரா கூறினார். இக்கறுப்பு கும்பலின் தலை வனை (வயது 25) போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து காரில் தப்பியோட முயன்ற 37 வயதுடைய ஆடவன் ஒருவ னையும் போலீசார் கைது செய் தனர். கோத்தா மரூடூ மாவட்டத்தில் 27 வயதுடைய பாதுகாவலர் ஒருவர், துவாரான் மாவட்டத்தில் மேலும் இருவர் என போலீசார் மொத்தம் 5 பேரை கைது செய்தனர் என சந்திரா செய்தி யாளர்களிடம் கூறினார். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த 11 கொள்ளைச் சம்பவங்கள், இர ண்டு சண்டை சம்பவங்கள், ஒரு கார் திருட்டு, 14 வீடுகளில் கொள் ளையடித்தது ஆகிய சம்பவங்க ளுக்காக இக்கும்பலை சேர்ந்த வர்கள் தேடப்பட்டு வந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்