வட கொரிய தலைவரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் - மின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட திர வியம் 'VX NERVE AGENT' - வி.எக்ஸ் வகையைச் சேர்ந்த இரசாயனம் என மலேசிய இரசாயன துறையின் தொடக்க ஆய்வறிக்கையின் வாயிலாக அறிவித்துள்ளது. விஎக்ஸ் வகையைச் சேர்ந்த இரசாயனம் 2005 மலே சிய இரசாயன ஆயுத சாசன சட்டம் மற்றும் 1997 இரசாயன ஆயுத சாசன சட்டத்தின் கீழ் இரசாயன ஆயுதங் களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ காலிட் அபு பக்கார் தெரிவித்துள்ளார். திரவம் மற்றும் எண்ணெய் வடிவில் இருக்கும் அந்த இரசாயன ஆயுதம், நரம்பு மண்டலத்தை தாக்கி மரணத்தை விளைவிக்கக்கூடியது. ஒருவரைக் கொல்ல 10 மில்லிகிராம் வி.எக்ஸ் வகையைச் சேர்ந்த இரசாயனம் போதுமானது என கூறப் படுகிறது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட வி.எக்ஸ் வகை இரசாயன ஆயுதம் மலேசியாவிற்குள் எப்படி வந் தது என்பது குறித்து போலீஸ் ஆராயும் என காலிட் தெரிவித்தார். கிம் ஜோங் நாம்-மைக் கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட அந்த உயிர்கொல்லி இரசாயனம் மிகச் சிறிய அளவில் கொண்டு வரப்பட்டிருந்ததால் கண்டு பிடிப்பது மிக சிரமம் என அவர் கூறினார். நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் அந்த விஷ வாயு பயன்படுத்தப்பட்டிருப்பது இரசாயன ஆயுத ஆய்வு மையத் தின் சோதனையில் தெரிய வந்துள்ளது. கொலைச் செய்யப்பட்ட கிம் ஜோங் நாம் மீது இரசாயன இலாகாவின் இரசாயன ஆயுத ஆய்வு மையம் அவரின் முகம் மற்றும் கண்களில் சில பரிசோதனைகளை மேற்கொண்டது. இதர விவரங்கள் இன்னும் ஆய்வு நிலையில் இருப்பதாக மேலும் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்