குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஷமீராவின் 27ஆவது வயது பிறந்தநாளைக் காராக்கில் கொண்டாடத் திட்டமிட்டுள்ள இந்தச் சமயத்தில் அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது பரிதாப அலைகளை உருவாக்கி உள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்டு வலது கை விரல்கள் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஷமீராவைச் சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு அவரின் உறவினர் ரேணு நாயர் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் எவ்வித மாறுதல்களையும் காணவில்லை. வழக்கம் போல் மலர்ச்சியுடனேயே மலர்க்கடையில் வேலை செய் யும் அவருக்குக் கொலை செய்யும் அளவிற்கு எதிரிகள் இருப்பார்கள் என்பதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை. சம்பவத்தை ஷமீராவின் நண்பர் மூலம் அறிந்த பிறகு அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் ரேணு (29) தெரிவித்தார்.சிலம்பரசன் எனப்படும் ஷமீரா தனது 19 வயதில் பாலின மாற்று அறுவைச் சிகிச் சையைச் செய்துகொண்டார். இங்குள்ள ஜாலான் புக்கிட் உபியில் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார். தெங்கு அம்புவான் அஃப்ஜான் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஷமீராவின் சடலம் இறுதிச் சடங்கிற்காகக் காராக்கிற்குக் கொண்டு செல்லப்பட உள்ளது. இதனிடையே, அகமட் முஸ்லிம் (25) என்பவர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்டு சம்பவ இடத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தச் சத்தத்தைக் கேட்ட பிறகு யாரோ பட்டாசுகளை வெடிக்கிறார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், ஒருவர் சுடப்பட்டிருப்பதை அறிந்து பயத்தின் காரணமாகச் சம்பவ இடத்தை விட்டுச் சென்று விட்டேன் என அந்தப் பகுதியில் வியாபாரம் செய்பவருமான அவர் குறிப்பிட்டார். இந்தப் படுகொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குவாந்தான் ஓசிபிடி துணை கமிஷனர் அப்துல் அஸிஸ் சாலே தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்