பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆடவர் ஒருவருக்கு மரணம் விளைவித்ததற்காக தூக்குத்தண்டனை விதிக்கப் பட்ட இரு இந்திய சகோதரர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் தண்டனை நிறைவேற்றப் படு கிறது. தண்டனை நிறைவேற்றத்தை ஒத்திவைக்குமாறு அந்த சகோதரர்களின் குடும்பத்தினர், நெகிரி செம் பிலான் யாங்டி பெர்துவான் பெசாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். சுந்தர் த/பெ பத்துமலை (வயது 40), பி. ரமேஷ் த/பெ பத்துமலை (வயது 45) ஆகிய இருவருக்கும் இன்று அதி காலை 6 மணிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என்று காஜாங் சிறைச்சாலை நிர்வாகம் அறிவித் துள்ளது. இதனைத் தொடர்ந்து தங்கள் வழக்கறிஞர் பி. உதயக்குமார் மூலமாக அவர்கள் தண்டனையை ஒத்தி வைக்குமாறு நெகிரி சமஸ்தானாதிபதியிடம் முறையிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அந்த இரு சகோதரர்களையும் சந்தித்து பேசுவதற்கு சிறைத்துறை நேற்று காலை 9 மணியளவில் ஒரு மணி நேரம் ஒதுக்கித் தந்தது. கடந்த 10 ஆண்டு காலமாக சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வந்ததே அந்த சகோதரர்களுக்கு வழங்கப்பட்ட பெரிய தண்டனையாகும். தாங்கள் புரிந்த குற்றத்திற்காக அவர்கள் மிகவும் வருந்துகின்றனர். மிக குறுகிய இடத்தில் இரும்புக்கம்பிக்கு பின்னால் நாள் ஒன்றுக்கு 23 மணி நேரம் அவர்கள் தண்டனையை அனுபவித்தனர். ஒரு மணி நேரம் மட்டுமே அவர்கள் இளைப்பாறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் காற்றோட்டமே இல்லாத இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதால் உடல் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் கருணை மனுவில் உதயக்குமார் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கும் பின்னிரவு 12.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நெகிரி செம்பிலான், மம்பாவ், போர்ட்டிக்சனை நோக்கி செல்லும் ஜாலான் லாபு, 19 ஆவது கிலோமீட்டரில் கிருஷ்ணன் த/பெ ராமன் (வயது 35) என்பவரை காருக்குள்ளேயே வெட்டிக்கொன்றதாக அவ்விரு சகோதரர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. போர்ட்டிக்சன், லுக்குட், தாமான் பண்டார் ஸ்பிரிங் ஹில்லை சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் குற்றவாளிகள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. கூட்டரசு நீதிமன்றமும் அவர்களின் தண்டனையை உறுதி செய்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்