நாட்டில் மனித உரிமை விவகாரங்களில் சாத்தியமான அளவு சிறுசிறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்ற போதிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக மலேசிய அனைத்துலக பொது மன்னிப்பு வாரியம் கூறிற்று. உதாரணத்திற்கு மரண தண்டனை விவகாரத்தை எடுத்துக் கொண்டால், இங்கு காணப்படும் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பாக அண்மைய காலத்தில் அதிகமான பொது விவாதங்கள் நடந்துள்ளன என்று கூறிய ஏஐ நிர்வாக இயக்குநர் கே.ஷாமினி தர்ஷிணி, இந்த விவாதங்கள் பொது மக்களை ஈர்த்திருப்பதை சுட்டிக் காட்டினார். ஏஐயின் 2016/2017 ஆம் ஆண்டு அனைத்துலக அறிக் கையை வெளியிட்டபோது அவர் இதை தெரிவித்தார். இந்த 480 பக்க அறிக்கையில் ஆறு முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. மரண தண்டனை போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படை, கருத்து சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், தன்னிச்சையான கைது நடவடிக்கை, அகதிகள் பிரச்சினை ஆகியவையே அவை. தடுப்புக் காவல் மரணத்தைப் பற்றி அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது. குறிப்பாக 2013ஆம் ஆண்டு போலீஸ் காவலில் மரணமடைந்த என்.தர்மேந்திரனின் விவகாரம் மேற்கோள் காட்டப்பட்டது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட தேசிய பாதுகாப்பு மன்ற சட்டம் (என்எஸ்சி), அடிப்படை மனித உரிமைகளை மீறக் கூடிய சட்டங்களில் மேலும் ஒன்று என்று ஷாமினி கூறினார். கருத்து சுதந்திரத்தைப் பற்றி குறிப்பிட்ட அவர், தேச நிந்தனைச் சட்டம், கொலை தொடர்பு பல்லூடக சட்டம் போன்றவற்றை சாடினார். அரசாங்கத்தைக் குறைக் கூறுவோரை அடக்க மட்டுமின்றி அவர்களை மிரட்டவும், கைது செய்யவும், தொந்தரவு செய்யவும் இந்தச் சட்டங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுவதாக ஷாமினி குறிப்பிட் டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்